மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

கரும்பு விவசாயிகளுக்காகக் களமிறங்கும் விஜயகாந்த்!

கரும்பு விவசாயிகளுக்காகக்  களமிறங்கும் விஜயகாந்த்!

தமிழக கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக, கரும்புக்கு விலைகேட்டும், நிலுவை தொகையை வழங்ககோரியும், கரும்பு விவசாயிகளைத் திரட்டி போராட்டம் செய்வதற்கு அழைப்பு விடுத்துள்ளார் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்.

தேமுதிக, மக்கள் நலக்கூட்டணிக்குத் தலைமையேற்று 2016 சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்று படுதோல்வி கண்டபிறகு, மாபெரும் மக்கள் நலக்கூட்டணி கலைந்துபோனது என்றார்கள் கூட்டணியிலிருந்த பிரமுகர்கள்.

தேர்தலுக்குப்பிறகு தேமுதிகவினர்களும் துவண்டுபோயிருந்தார்கள். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர் கடனில் சிக்கித் தவித்து மாற்றுக்கட்சிகளுக்கு தாவிட்டார்கள்.

கட்சி கலகலத்து போனதை அறிந்த தேமுதிக தலைமை, கட்சி நிர்வாகிகளை அழைத்து ஊக்குவித்து, பொறுப்புகள் கொடுத்துவருகிறார்கள். மேலும், மக்கள் செல்வாக்கை பெறுவதற்கு, தமிழகம் முழுவதும் மக்கள் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடவும் முடிவு செய்திருக்கிறார் விஜயகாந்த்.

இந்த வகையில், கரும்பு விவசாயிகளுக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக, அரசு அறிவித்த கூடுதல் தொகையைக் கொடுக்காத சர்க்கரை ஆலையையும், தமிழக அரசைக் கண்டித்தும் தேமுதிக நிரந்தரப் பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில், அக்டோபர் 24ஆம் தேதி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

வடமாவட்டங்களில் தன் கட்சி செல்வாக்கு சரிந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இந்தப் போராட்டம் இருக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் விஜயகாந்த். அதனால், வடமாவட்டங்களில் உள்ள கட்சியினரையும், கரும்பு விவசாயிகளையும் திரட்டும் வேலையில் இறங்கியுள்ளார் தேமுதிகவின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon