மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

அத்தியின் மருத்துவப் பயன் - ஹெல்த் ஹேமா

அத்தியின் மருத்துவப் பயன் - ஹெல்த்  ஹேமா

அத்திப்பூத்தாற்போல் என்ற பழமொழியினால் நாம் புரிந்துகொண்டது, அபூர்வமான பூ போல என்பதுதான். ஆனால், அத்திப்பழம் கிடைத்துக்கொண்டுதானே இருக்கிறது. அந்தப் பூ நம்ம கண்களுக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. ஏனென்றால், அது அடிமரத்தில் இருந்து உச்சி வரைக்கும் மரத்தை ஒட்டியே காய்க்கும்

‘காணாமல் பூப்பூக்கும்; கண்டு காய் காய்க்கும்’ என்ற விடுகதையிலும் அத்தியைச் சொல்வர்.

அத்திப்பழத்தின் சத்துகள்

84% பழக்கூடும், 16% தோலும் சேர்ந்ததுதான் 100 கிராம் அத்திப்பழம். உலர்ந்த அத்திப்பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும் நார்ச்சத்தும் உள்ளது.

அத்திப்பழம் ஒன்றின் சத்துகள்: 1 பழம் = 50 gm (% சராசரி தினப்படி சத்து) நார்ச்சத்து - 5.8% , பொட்டாசியம் - 3.3%, மாங்கனீசு - 3%, வைட்டமின் பி6 - 3%, கலோரி (37) - 2%, புரதம் - 2 கிராம், கால்ஷியம் - 100 மி.கி, இரும்பு - 2 மி.கி.

அத்தியின் மருத்துவப் பயன்

அத்திப்பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக்கூடிய Anti Oxidants உள்ளன. அத்திப்பழம் அதிக போஷாக்கு அளிக்கக் கூடியது. அத்திப்பழத்தைத் தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இருவேளையும் சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண் மலடு நீங்கும்.

உலர்ந்த அத்திப்பழங்களைத் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கைப் பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.

அத்திப்பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும். உலர்ந்த அத்திப்பழங்களை இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தைச் சாப்பிட்டு, அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் வெளியேறும். இவ்வாறு 10 - 20 நாள்கள் சாப்பிட, உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.

நீரழிவு குணமாகும்

அத்தி மரத்தை லேசாக கீறினால் பால் வடியும். இது துவர்ப்புமிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவிவிட்டாலும் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.

அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு, இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும். ரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.

அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும். நாட்டு அத்தியின் பால் மரு, மூலம் போன்றவற்றில் போட்டு வர அவை சுருங்கி விடும்.

தென்னை, பனை போன்றவற்றில் பாளையில் பால் சுரக்கும். அத்தி வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300 - 400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளைபடுதல் நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்ப்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.

அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப்போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

முருங்கை விதை, பூனைக்காலி விதை, நலப்பனைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சம அளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.

தினமும் மூன்று நான்கு அத்தி சாப்பிட்டுவந்தால், உடல் பொலிவுபெறும். முதுமையைத் தாமதப்படுத்தும். கெரோட்டினாய்டு உள்ளதால், பார்வைத்திறனை மேம்படுத்தும்.

ஆக்ஸிலேட் நிறைந்துள்ளது, சிறுநீரகக் கல் நீங்க உதவும். தினமும் ஆறு அத்திகளை ஒரு கப் நீரில் ஊறவைத்து, மறுநாள் பருகிவரலாம்.

கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கு நல்லது.

தினமும் இரண்டு மூன்று அத்தியை தேனில் ஊறவைத்து சாப்பிட்டுவந்தால், மலச்சிக்கல் நீங்கும்.

வைட்டமின் சி நிறைந்துள்ளதால், தொண்டைப்புண்கள், குடல்புண்களை ஆற்றும்.

ஹெல்த் ஹேமா 01 | ஹெல்த் ஹேமா 02 | ஹெல்த் ஹேமா 03 | ஹெல்த் ஹேமா 04 | ஹெல்த் ஹேமா 05 | ஹெல்த் ஹேமா 06 | ஹெல்த் ஹேமா 07 | ஹெல்த் ஹேமா 08 | ஹெல்த் ஹேமா 09 | ஹெல்த் ஹேமா 10 | ஹெல்த் ஹேமா 11 | ஹெல்த் ஹேமா 12 | ஹெல்த் ஹேமா 13 | ஹெல்த் ஹேமா 14 | ஹெல்த் ஹேமா 15 | ஹெல்த் ஹேமா 16 |

ஹெல்த் ஹேமா 17

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon