மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

மழையை சேமிக்க மந்திரக் கிணறுகள்!

 மழையை சேமிக்க மந்திரக் கிணறுகள்!

விளம்பரம்

சென்னை மாநகராட்சி பூங்காக்களில் மனித நேய மேயரின் வாசனை வீசுவது பற்றி நேற்று பார்த்தோம். பூங்கா என்றால் வெறும் பொழுது போக்க மட்டுமல்ல, சென்னைக்கு பயன் மிக்கவையாகவும் இருக்க வேண்டும் என்று யோசித்த மேயர் தனது பதவிக் காலத்தின் போதே ஒரு மகத்தான திட்டத்தை முன் வைத்திருக்கிறார்.

அது அப்போது அதிகாரிகளிடையே மகத்தான வரவேற்பை பெற்று இப்போது செயலாக்கம் பெற முனைந்திருக்கிறது.

சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் மிகமிக மிக குறைந்துதுவிட்டது என்பதை யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தெருவுக்குத் தெரு அணி வகுக்கும் தண்ணீர் லாரிகளும், அதன் பின் கூட்டம் கூட்டமாக காத்திருக்கும் குடங்களுமே சென்னையில் நிலத்தடி நீர் பற்றாக்குறையை உரக்கச் சொல்லிவருகின்றன.

இந்நிலையில் எவ்வளவு மழை பொழிந்தாலும் சென்னையின் கான்க்ரீட் தரைகள் அவற்றை உறிஞ்சிக் கொள்ள முடியாது. பெரும்பாலான மழை நீர் கழிவு நீர் கால்வாய்கள் வழியாகவே வெளியேறுகின்றன. மறைந்த முதல்வர் அம்மாவின் மழை நீர் சேமிப்புத் திட்டம் பலத்த வெற்றி அடைந்திருந்தாலும் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துகொண்டுதான் இருக்கின்றது.

காரணம்...சென்னையில் கடந்த 25 ஆண்டுகளில் லட்சக்கணகான கிணறுகள் தூர்க்கப்பட்டு மூடப்பட்டு அவற்றின் மேல் அப்பார்ட்மெண்ட்டுகள் எழும்பியிருக்கின்றன. நிலத்தடி நீரைக் காப்பாற்றும் கிணறுகள் மூடப்பட்டதால் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது.

இந்த நிலையில்தான் மனித நேயரின் நிர்வாகத்தில் ஒரு பளிச் யோசனை விதைக்கப்பட்டது.

அதாவது... நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்துடன், தெருக்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் கிணறுகள் அமைக்க, புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் விளக்கிய செய்தியை நாளேடுகளில் நீங்கள் பார்த்தீர்களா?

"சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில், புதிதாக கட்டி வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தில், கழிவுநீர் இணைப்பு ஏதும் இல்லாமல் பாதுகாக்க, மாநகராட்சி பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. புதிதாக கட்டப்படும் மழைநீர் வடிகால் திட்டத்தில், மழைநீரை கொண்டு, விரிவாக்க பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் மாநகராட்சி சிறப்பு திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இதன்படி, ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பகுதியில், மழைநீர் ஒன்று சேரும் இடங்களில், புதிதாக மழைநீர் சேகரிப்புக்கு கிணறுகள் அமைக்கப்படுகின்றன.

இந்த ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தில், வடிகால்களில் வரும் மழைநீர், நீர்நிலைகளில் சேகரிப்பதும், ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க செய்வதும் தான், மாநகராட்சியின் இலக்கு. ஒரு பகுதியில் மழைநீர் வடிந்து வரும் இடத்தில், நீர்நிலைகள் ஏதும் இல்லாத பட்சத்தில், அங்குள்ள பூங்காக்கள், தெருக்கள், மாநகராட்சிக்கு சொந்தமான இதர பிற இடங்களில், 'சங்கன் வெல்' என்ற பெயரில், கிணறு ஒன்று அமைக்கப்படும்.

மொத்தம், 15 அடி ஆழத்தில் அமைக்கப்படும் இந்த கிணற்றின் மையப்பகுதியில், 15 மீட்டர் ஆழத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்படும். இந்த கிணறு மூலம், மழைநீர் உள் சென்று, சுற்று வட்டார பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை கணிசமாக உயர்த்தும். மொத்தம், 48 இடங்களில் இந்த கிணறுகள் அமைக்கப்படுகின்றன. இதில், 22 இடங்களில் தற்போது பணிகள் முடிந்துள்ளன. கிணறுகள் அமைக்கும் பணிகள், 26 இடங்களில் நடந்து வருகின்றன. இந்த மூன்று மண்டலங்களில் மழைநீர் வடிகால் திட்டம் முழுமை பெறும் போது, 74 இடங்களில், இந்த மழைநீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கும் பணி நிறைவு பெறும்.

மழை நீர் சேகரிப்புக் கிணறுகள் என்னும் மகத்தான இந்தத் திட்டம்

சென்னைக்கு வரப் பிரசாதம்.

மழைநீர் சேகரிப்பு கிணறு, 15 அடி ஆழம், 4 அடி விட்டத்தில் அமைக்கப்படும். இந்த கிணறுடன், அருகில் உள்ள மழைநீர் வடிகால்கள் இணைப்பு செய்யப்படும். இந்த கிணறுகள் மணற்பாங்கான இடங்களில் அமைக்கப்படுகின்றன. களிமண் உள்ள வரை, 15 அடி ஆழத்திற்கு உறை கிணறு அமைக்கப்படும். அதன்பின், கிணற்றின் நடுப்பகுதியில், 15 மீட்டர் ஆழத்திற்கு ஆழ்துளை குழாய் அமைக்கப்படும். கிணறு பகுதியில் ஜல்லி, மணல் கொண்டு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.

மாநகராட்சிக்கு சொந்தமான குளங்கள், மாநகராட்சிப் பூங்காக்கள், மாநகராட்சிப் பள்ளி வளாகங்கள், அம்மா உணவக வளாகங்கள், மாநகராட்சி மயானங்கள் என்று மாநகராட்சிக்குசொந்தமான பகுதிகளில் இந்த மழை நீர் சேகரிப்புக் கிணறுகள் அமைக்க மனித நேய மேயர் காலத்தில் விழுந்த விதை இப்போது முளைக்கத் தொடங்கியுள்ளது. ஒரு சில பூங்காக்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு, இப்போது மாநகராட்சியின் அனைத்து பெரிய பூங்காக்களிலும் மழை நீர் சேகரிப்புக் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இனிமேல் சென்னைக்கு கிடைக்கும் மழையை சென்னையிலேயே நிலத்தடியில் சேமிக்கும் அற்புதமான சூழலியல் கட்டமைப்பு இது.

இன்னும் இருக்கின்றன மனித நேய மேயரின் சாதனைகள். காண்போம், காத்திருந்து...

கருத்துகளை தெரிவிக்க... [email protected]

வளரட்டும் மனித நேயம்

விளம்பர பகுதி

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon