மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

ஜெய் ஷா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை!

ஜெய் ஷா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை!

அமித் ஷா மகன் ஜெய் ஷா மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்குச் சொந்தமான டெம்பிள் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் லாபம், பிரதமர் மோடி ஆட்சியமைத்த பின் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தி வயர் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது .

இது அரசியல் வட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும், அமித் ஷா பதவி விலக வேண்டும், சி.பி.ஐ, அமலாக்கத் துறை விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

அதே வேளையில், விதிகளின்படியே ஜெய் ஷாவிற்குக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, செய்தி வெளியிட்ட நிறுவனம் மீது ஜெய் ஷா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை (அக்.11) விசாரணைக்கு வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஜெய் ஷாவுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். புதுடெல்லியில் தேசியப் புலனாய்வு முகமையின் புதிய தலைமை அலுவலகக் கட்டிடத்தை ராஜ்நாத் சிங் இன்று திறந்துவைத்தார். அப்போது ஜெய் ஷா விவகாரம் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், “இத்தகைய குற்றச்சாட்டுகள் காலங்காலமாக எழுந்துவருவதுதான். இதில், எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை” என்று தெரிவித்தார்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon