மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

டெங்கு ஒழிப்பில் அலட்சியம்: ஊராட்சி அதிகாரி பணியிடைநீக்கம்!

டெங்கு ஒழிப்பில் அலட்சியம்: ஊராட்சி அதிகாரி பணியிடைநீக்கம்!

டெங்குவை ஒழிக்க ஒவ்வொரு தனி மனிதரும் முன் வர வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தனமாக இருந்ததாகக் கூறி ஊராட்சி செயலாளர் ரெஜினாவைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் ஏடிஎஸ் கொசுகளின் இனப்பெருக்கத்தினால் உருவான டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின்எண்ணிக்கையும் உயிர்ப் பலியும் நாளுக்கு நாள் அதிகரிக்கவே மக்களின் அச்சமும் அதிகரித்துவருகிறது. சாதாரணகாய்ச்சல் என்றாலும் மக்கள் பீதியடைகின்றனர். டெங்குவை ஒழிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைஎடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் டெங்கு ஒழிந்தபாடில்லை.

இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி டெங்கு ஒழிப்புப் பணியில் நேரடியாக ஈடுபட்டுள்ளார். சேலம்மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் 18 கிராமங்களில் டெங்கு ஒழிப்புக்கான தூய்மைப் பணியைஇன்று (அக். 10) துவக்கிவைத்தார். பிறகு அவரே சுகாதாரப் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒவ்வொரு வீடாகச் சென்று ஆய்வுநடத்தி வீட்டைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஒவ்வொருவரும டெங்குவை ஒழிக்க முன் வர வேண்டும். அனைவரும் சுகாதாரப் பணியில் ஈடுபட வேண்டும். அப்படிச் செய்தால் 100 சதவிகிதம் டெங்குவை ஒழிக்கலாம் என்றும் ரோகிணி கூறியுள்ளார். தாரமங்கலத்தில் இன்று மட்டும்5000த்துக்கும் மேற்பட்ட பணியார்கள் டெங்கு ஒழிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தனமாக இருந்ததாகக் கூறி ஊராட்சி செயலாளர் ரெஜினாவைப் பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.

மேல்நிலைத் தொட்டிகளில் குளோரின் கலாக்காமல் பணியில் அலட்சியம் காட்டியதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியதையடுத்து ரெஜினா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon