மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 24 நவ 2020

மனநல டாக்டர் வடிவேலு: அப்டேட் குமாரு

மனநல டாக்டர் வடிவேலு: அப்டேட் குமாரு

எவ்வளவோ பிரச்சனைகளுக்கு நடுவுலயும் தமிழ்நாட்டு மக்கள் எப்படி நிம்மதியா பிழப்பை ஓட்டுறாங்கன்னு பார்த்தா அதுக்கு பின்னால ‘மலை நல்லா இருக்கியா மலை’ன்னு சிரிச்சுகிட்டே வடிவேலு தான் நிக்குறாரு. நடிச்சுகிட்டு இருக்கும் போதே காலாவதியாகிடுற நடிகர்கள் மத்தியில ஏன்ப்பா நடிக்க மாட்டிக்காருன்னு ஏங்க வச்ச நடிகர் அவர். சமூகத்துல இருக்குற அத்தனை தரப்பு மக்களும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சமயத்துல வடிவேலுவோட ஒரு வசனத்தையாவது சொல்லாம இருக்கமாட்டாங்க. ரெண்டாயிரம் வருசமா சொலவடைகள் இருந்த இடத்தை வடிவேலு முழுக்க ஆக்கிரமிச்சுருக்காரு. அவ்வளவு பெரிய தாக்கத்தை ஒரு கலைஞனால ஏற்படுத்த முடிஞ்சுருக்குன்னா அது உண்மையிலேயே அதிசயம்தான். தன்னையே பகடி பண்ணும் அவரோட காமெடி அகந்தையை அடிச்சு நொறுக்குது . பிரச்சனைகளையும் கொண்டாட்டமா மாத்துற அவரோட பாணி தான் பலபேரை இங்க உயிரோட வச்சிருக்கு. இன்னைக்கு எதோ உலக மனநல நாளாம். வடிவேலு பிறந்த நாளை வேற எப்படி சொல்ல முடியும்? சிரிச்சுக்கிட்டே அப்டேட்டை பாருங்க.

gowrisa

சிக்கனம் தேவை என்பதை

மாதக்கடைசியில் புரிந்துகொள்வதும், அதை

மீண்டும் மாத துவக்கத்தில் மறந்துவிடுவதும்.

சங்கிலித்தொடர் கோட்பாடு தானே.

aruntwitzzz

வாழ்க்கையில் கஷ்டப்பட்டு, உழைத்து, முயற்சித்து முன்னேற போகும் போதெல்லாம் 'நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட' என பதில் தருகிறது வாழ்க்கை.

Kozhiyaar

தேவையற்ற நேரத்தில் இயங்கும் மின்விளக்கும் மின்விசிறியும், தேவையான நேரத்தில் மின்சாரத் தடைக்குக் காரணமாகி விடுகிறது!!!

kumarfaculty

இந்தக் கலர்ல வேற டிசைன் இருக்கா? இந்த டிசைன்ல வேற கலர் இருக்கா? துணிக்கடை கேள்வி நேரங்கள்.

manipmp

நடந்து செல்ல பழகியபின்

கடந்து செல்ல பழகுகிறோம்!

yugarajesh

எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக சந்திக்க தயாராக உள்ளது-செல்லூர் ராஜூ#நடிகர் சங்க தேர்தலை கூடவா..??

yugarajesh

'பாம்பென்றால் படையும் நடுங்கும்னு'நாம படிச்ச பழமொழி மாதிரியே,

இனி வரும் காலம் 'கொசு என்றால் குடும்பமே நடுங்கும்னு' புதுமொழி படிக்கும்#டெங்கு

ajmalnks

லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

அவ்வளவு செருப்புக்கு நாங்க எங்கே போறது?-மக்கள்

mujib

சசிகலாவின் பரோல் நாளையோடு முடிவு...

MLA/MPக்களின் ஓவர் ஆக்டிங்கும் நாளையோடும் முடியும்..

siva

சுட்டி டிவில வர்ர டோரா கூட பக்கத்து ஊர கண்டு புடிச்சி போயிருது. இவங்களுக்கு டெங்குவ கண்டு புடிக்க தெரில இன்னும்.

Itzpandy

அப்போ குழந்தைகளை சிங்கம்,புலியை காட்டி பயமுறுதிட்டு இருந்தோம் ஆனால் இப்போ நாம ஒரு சின்ன கொசுவுக்கு பயப்படுறோம்...

ShivaP

பெட்டி படுக்கையை தூக்கிட்டு வீட்டைவிட்டு ஓடிபோடான்னு சொன்னாங்க

இப்பல்லாம் போனையும், அதனோட சார்ஜரையும் எடுத்துட்டு ஓடிபோடான்னு சொல்றாங்க

sheik_twitts

தீபாவளி ஷாப்பிங் போலாமா"ன்னு மனைவி கூப்டா உடனே சிவாஜிய மனசில நெனச்சுகிட்டு எனக்கு உடம்பு சரியில்ல நீ மட்டும் போயிட்டு வாயேன்னு நடிச்சிடனும்

vickytalkz

டெங்கு கொசு கடிக்காமல் இருக்க தலைமுதல் கால்வரை தேங்கா எண்ணெய் தடவி கொள்ளுமாறு வருத்தப்படாத வாலிபர் சங்கம் கேட்டுக்கொள்கிறது

Vadivelu4Life

Boopathy Murugesh

ஜெயலலிதாவுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யாதது ஏன்? - தமிழிசை கேள்வி

எய்ம்ஸ்-லருந்து வந்த ஒரிஜினல் டாக்டரே ஒன்னும் பண்ண முடியாதுன்னு போய்ட்டாரு.. இந்தம்மா பண்ற அநியாயம் இருக்கே... அய்யய்யய்யய்யூ...

ajmalnks

சசிகலா பரோல் நாளையோடு முடிவு-செய்தி

தினகரனோட ஸ்லீப்பர் செல்லுக்கு எல்லாம் நாளைக்குதான் நிம்மதியான ஸ்லீப்பிங்கே

yugarajesh

பணத்தகராறில் சண்டை நடிகர் சந்தானம் காண்டிராக்டர் மோதல்#தம்பிக்கு காமெடிய விடவும் ஆக்சன் நல்லா வரும் போல..!

Boopathy Murugesh

மதுரையிலிருந்து பேருந்தில் வரும் கொசுக்கள் தான் சென்னையில் டெங்கு பரப்புகிறது - அதிகாரிகள் விளக்கம்

செல்லூர் ராஜு மைண்ட் வாய்ஸ் : பஸ் கட்டணத்த உயர்த்திட்டா என்ன?

Inigo Pious

ப்ரோ பாத்திங்களா

என்னாத்த..

எங்க ஆண்டவரு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை வரவேற்று வாழ்த்து தெரிவிச்சுருக்காரு.....

எச்ச ராஜாவும் தான் வாழ்த்திருக்காரு......போவியா வந்துட்டான்.

rahimgazali

சினிமா தயாரிப்பில் இறங்கினார் வைகோ-செய்தி

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருகிறார்கள். இவர் அரசியலிலிருந்து சினிமாவுக்கு போகிறார்போல.

கருப்பு கருணா

ஊழல்தான் முக்கியமான முதல் பிரச்சனை என்று சொல்லும் கமலஹாசனுக்கு நல்லவேட்டை.

அமீத்ஷா மாட்டிக்கிட்டாரு.விடாதீங்க ஆண்டவரே... ம்ம்ம்ம்..ட்விட்டர தட்டி உடுஙக..!

-லாக் ஆஃப்

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon