மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 10 அக் 2017

ரஜினி - ஏமி கடைசி பாடல்!

ரஜினி - ஏமி கடைசி பாடல்!

எந்திரன் படத்தைத் தொடர்ந்து ரஜினி-ஷங்கர் கூட்டணியில் அதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் திரைப்படம் `2.0'. ஷங்கர் வெளியிட்ட கிளிம்ப்செஸ் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கியுள்ளது. இப்படத்தின் எஞ்சியுள்ள ஒரு பாடல் காட்சிக்காக மும்பை சென்றுள்ளது படக் குழு.

ஷங்கரின் `ஐ' படத்தைத் தொடர்ந்து 2.0 படத்திலும் நாயகியாக நடித்துவருகிறார் ஏமி ஜாக்சன். படத்தின் மற்ற காட்சிகள் முடிந்துள்ள நிலையில், ரஜினிக்கும் ஏமிக்கும் இடையிலான ஒரே ஒரு பாடல் காட்சி மும்பையில் படமாக்கப்படவுள்ளது. இதன் படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாக ஏமி ஜாக்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (அக்டோபர் 10) தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா அக்டோபர் 27ஆம் தேதி துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கிலும், டீசர் வெளியிட்டு விழா நவம்பர் 22ஆம் தேதி ஐதராபாத்திலுள்ள ஷில்பகலா வேதிகா அரங்கத்திலும் நடைபெற இருக்கிறது. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை ரஜினியின் பிறந்தநாளையொட்டி டிசம்பர் 12ஆம் தேதி சென்னையில் நடத்த திட்டமிட்டுவருகின்றனர்.

ஹாலிவுட் படத்திற்கு நிகராக 3Dயில் உருவாகிவரும் இப்படத்தை அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 25ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon