மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

யோகாவுக்கும் மதத்துக்கும் தொடர்பு இல்லை!

யோகாவுக்கும் மதத்துக்கும் தொடர்பு இல்லை!

யோகாவுக்கும் மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

நலமாக வாழ யோகா என்ற நிகழ்ச்சியின் சர்வதேச மாநாட்டை டெல்லியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு துவக்கிவைத்தார். அதன்பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், “யோகாவுக்கும் மதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. பழங்கால விஞ்ஞானமான யோகாவுக்கு மதசாயம் பூசுபவர்கள் மனித இனத்துக்கு மிகப்பெரும் தீங்கை இழைக்கிறார்கள்.

துரதிருஷ்டவசமாக சிலர் பழமையான அறிவியல் முறையான யோகாவை மதத்துடன் தொடர்புபடுத்துகிறார்கள். அனைத்து விதமான உடற்பயிற்சிகளுக்கும் தாய் போன்றது யோகா. தேக ஆரோக்கியம், மன நலன் ஆகியவை யோகா மூலம் கிடைக்கின்றன. மருத்துவச் செலவுகளையும் யோகா குறைக்கிறது” என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon