மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

உணவுப் பூங்காக்களை அதிகரிக்கத் திட்டம்!

உணவுப் பூங்காக்களை அதிகரிக்கத் திட்டம்!

உணவுப் பதப்படுத்துதல் துறை மேம்பாட்டுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறு உணவுப் பூங்காக்களை அதிகளவில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற அசோசெம் மாநாட்டில் பங்கேற்ற மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சரான சத்வி நிரஞ்சன் ஜோதி பேசுகையில், “நாடு முழுவதும் 42 உணவுப் பூங்காக்கள் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவையனைத்தும் 2019ஆம் ஆண்டுக்குள் அமைக்கப்படும். உணவு பதப்படுத்துதல் துறையில் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியால் ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வு காணப்படும். உணவு பதப்படுத்துதலை மேம்படுத்தும் வகையில் சிறு உணவுப் பூங்காக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும். இத்திட்டம் அரசு ஒப்புதலுடன் ரூ.6,000 கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படும்.

மெகா உணவுப் பூங்காக்களை அமைப்பதற்காக இத்துறைக்கு ரூ.50 கோடி வரையில் மானியம் வழங்கப்படுகிறது. உணவு பதப்படுத்துதலை மேம்படுத்தும் அதேவேளையில் உணவுக் கழிவுகள் அதிகம் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் இலக்கு அரசுக்கு உள்ளது. ஆனால் விவசாய விளைபொருட்களை அவர்களிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யும் வரையில் அந்த இலக்கை அடைய இயலாது. உணவு உற்பத்தி மட்டுமல்லாமல் உணவு பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon