மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 அக் 2017

தினகரன், புகழேந்தி மீதான நடவடிக்கைக்குத் தடை!

தினகரன், புகழேந்தி மீதான நடவடிக்கைக்குத் தடை!

தினகரன், அவரது ஆதரவாளர் புகழேந்தி மீதான தேசத்துரோக வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள எப்ஐஆர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினகரன் தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக சேலம் மாவட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் விநியோகித்த துண்டு நோட்டீஸில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்யும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து தினகரன் அணியைச் சேர்ந்த 17 பேர் மீது சேலம் அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . அதில் தினகரன், புகழேந்தி உள்ளிட்டோர் மீது தேசத்துரோக வழக்கும் பதிவு செய்தனர். இதற்கு எதிர்வினையாற்றிய தினகரன் தரப்பு," இது பழிவாங்கும் நோக்கில் பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கு எனவும், தினகரன் என்ன ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவரா" என்றும் கருத்து தெரிவித்தனர்.

தேசத்துரோக வழக்கை எதிர்த்துக் கடந்த 6ஆம் தேதி தினகரன் தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றம் தாக்கல் செய்த மனுவில்," பொய்யான புகாரில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நோட்டீஸில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா, தினகரன் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றது போலவே என் படமும் இடம் பெற்றுள்ளது. அந்த துண்டு நோட்டீஸை யார் அச்சிட்டனர் என்றும் எனக்கு தெரியாது, என் பெயரை தேவை இல்லாமல் எப்ஐஆரில் சேர்த்துள்ளனர், எனவே உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கையும், எப்ஐஆரையும் ரத்து செய்ய வேண்டும்" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில் இன்று (அக்டோபர் 10) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், புகழேந்தி தரப்பு வழக்கறிஞர், “மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது தவறில்லை, அரசியல் காரணங்களுக்காக அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது" என்று வாதிட்டார்.

இதற்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை பதிலளிக்கும் வரை இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமென புகழேந்தி தரப்பில் வாதிடப்பட்டது.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

செவ்வாய் 10 அக் 2017