மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 15 செப் 2019

காஞ்சி முதல் குமரி வரை போராட்டம்!

 காஞ்சி முதல் குமரி வரை போராட்டம்!

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷாவின் ஊழல் விவகாரம் தொடர்பாக மோடி அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தித் தமிழகம் முழுவதும், சென்னை அல்லாத மாவட்டங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மகன் ஜெய் அமித் ஷா நடத்தும் தொழிலின் ஆண்டின் நிகர வருமானமானது, முந்தைய ஆண்டைவிட 16,000 மடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள். பாஜகவின் மெகா ஊழலாகக் கருதப்படுகிற ஜெய் அமித் ஷாவின் விவகாரத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது காங்கிரஸ் டெல்லி தலைமை.

இதையடுத்து, தமிழக காங்கிரஸ் சார்பாக, தமிழகம் முழுவதும் சென்னை அல்லாத இதர மாவட்டத் தலைநகரங்களில் அக்டோபர் 10ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் செய்யவும், அக்டோபர் 11ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்யவும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் சென்னை அல்லாத மாவட்டங்களில் பாஜக ஆட்சிக்கு எதிராகவும், ஜெய் அமித் ஷாவின் மெகா ஊழலுக்கு எதிராகவும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon