மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 22 ஜன 2021

ரயில் நிலையத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்!

ரயில் நிலையத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்!வெற்றிநடை போடும் தமிழகம்

மும்பையில் ரயிலுக்காகக் காத்திருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடைமேடையிலேயே குழந்தை பிறந்துள்ளது.

மும்பை தாதர் ரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் நேற்று( அக்டோபர் 9) சல்மா சாயிக் என்ற 26 வயதான கர்ப்பிணிப் பெண் ரயிலுக்காகக் காத்திருந்தார். அப்போது, திடீரென்று அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து, ரயில்வே நிலையத்தில் உள்ள ஒரு ரூபாய் கிளினிக் மருத்துவர் பிரஜ்வாலிட் வரவழைக்கப்பட்டு, பிரசவம் பார்க்கப்பட்டது. மேலும், இவருக்கு உதவியாக ரயில்வே பெண் போலீசார் உடன் இருந்தனர். சல்மா சாயிக்கு நேற்றிரவு 10:17 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து, தாயும் சேயும் அருகிலுள்ள கே.எம்.இ. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதுபோன்று, கடந்த மார்ச் மாதம் இதே தாதர் ரயில் நிலையத்தில் சுல்தானா காடன் என்ற பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்தாண்டு, ஜூன் மாதம் தானே ரயில் நிலையத்தில் மீனாட்சி ஜாதவ் என்ற பெண்ணுக்கு ஒன்பதாவது நடைமேடையில் ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை ரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள ஒரு ரூபாய் கிளினிக்குகள் பயணிகளுக்குப் பெரிதும் உதவியாக இருந்துவருகின்றன.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon