மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கும் ஆந்திரா!

பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கும் ஆந்திரா!

60 சதவிகித ஐ.டி. துறைகள் ஆந்திராவிற்கு வரும் என்று அம்மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் லோகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டுக்குள் விசாகப்பட்டினம் நகரில் ரொக்கப் பண பரிமாற்றத்தைக் குறைத்து பணமில்லா பரிவர்த்தனையை பெருமளவு ஊக்குவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிளாக்செயின் வர்த்தக மாநாட்டில் பங்கேற்றபோது அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது: "பணப் பரிமாற்றத்தைக் குறைக்க நமக்கு புதிய நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இதற்காக விசாகப்பட்டினம் துறைமுக நகரில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஏற்கனவே பேருந்துகளில் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் மூலம் ஸ்கேன் செய்து மின் கட்டணம் செலுத்தும் திட்டம், சமையல் எரிவாயு, வாகன எரிபொருள்கள், தொலைப்பேசி கட்டணம் போன்றவற்றிற்கு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், பணமில்லா பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படுவதன் மூலம் 60 சதவிகித தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆந்திராவிற்கு வரும். அதில் 20 சதவிகிதம் அமராவதி நகருக்கும், 20 சதவிகிதம் திருப்பதிக்கும் வரும். பின்டெக் வேலி ஒரு முக்கிய துறையாக உள்ளது. இது வரும் ஆண்டுகளில் 2000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மேலும் 20 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை உருவாகும்" என்றார்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon