மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

வீரர்களின் உடலுக்குப் பயணிகள் அஞ்சலி செலுத்த திட்டம்!

வீரர்களின் உடலுக்குப் பயணிகள் அஞ்சலி செலுத்த திட்டம்!

ராணுவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடலை விமானத்தில் எடுத்துச் செல்லும் போது பயணிகள் மரியாதை செலுத்த அறிவிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் மரணமடைந்த ராணுவ, கடற்படை, விமானப்படை வீரர்களின் உடலை விமானங்களில் எடுத்துச் செல்லும் போது பயணிகள் 30 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமானத்தில் எடுத்துச் செல்லும்போது “ நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரரின் உடலை நாம் எடுத்துச் செல்கிறோம். அவருடைய வீர செயலுக்காக பெருமிதம் கொள்ள வேண்டும். எனவே அவருடைய ஆன்மா சாந்தி அடைய நாம் 30 வினாடிகள் மவுன அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்த அறிவிக்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது

தற்போது இவை வரைவு திட்டமாக உள்ளது, விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கு ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தரப்பில்,” தற்போது இதுபோன்று எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படுவதில்லை. பல ஆண்டுகளாக விமானங்களில் வீரர்களின் உடல்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. அப்போது ஏற்றும்போதும், இறங்கும்போதும் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. தற்போது மூன்றாவது முறையாக மரியாதை செலுத்துவது தேவையற்றது “என்று கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon