மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

வில் வித்தையில் மிரட்டிய இந்தியா!

வில் வித்தையில் மிரட்டிய இந்தியா!

உலக யூத் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் ஜெம்சன் நிங்தோஜம் - அங்கிதா பகத் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.

அர்ஜென்டீனாவின் ரோசாரியோ நகரில் உலக யூத் வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. அக்டோபர் 8ஆம் தேதி அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜெம்சன் நிங்தோஜம் - அங்கிதா பகத் ஜோடி, ரஷ்ய ஜோடியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 6-2 என்ற புள்ளிக்கண்ணக்கில் இந்திய ஜோடி, ரஷ்ய ஜோடியை வீழ்த்தித் தங்கப்பதக்கம் வென்றது. முன்னதாக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், தரவரிசையில் ஒன்பதாம் நிலையில் இருக்கும் இந்திய ஜோடி, முதல் நிலையில் இருக்கும் கொரிய ஜோடியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அங்கிதா பகத் கூறுகையில், "முதலில் கொஞ்சம் நடுக்கம் இருந்தது. இருப்பினும் சிறப்பாகs செயல்பட்டதால் தங்கம் கிடைத்தது. தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

யூத் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தீபிகா குமாரிக்குப் பிறகு தங்கம் வென்ற பெருமை ஜெம்சன் - அங்கிதா ஜோடிக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2009, 2011 ஆகிய ஆண்டுகளில் தீபிகா குமாரி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் இதுதவிர இந்தியா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon