மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

சந்தையை இழந்த நானோ கார்கள்!

சந்தையை இழந்த நானோ கார்கள்!

டாடா நானோ காரை தேவையில்லாமல் பலர் குறி வைப்பதாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் கூறியுள்ளார்.

2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டாடா நிறுவனத்தின் கனவு வாகனமான நானோ வெளியாகியது. இந்த காருக்கு விலை ஒரு லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் உலகிலேயே விலைக் குறைவான கார் என்ற பெயரை நானோ பெற்றது. ஆனால், காலப்போக்கில் பல்வேறு சிக்கல்களை நானோ கார்கள் சந்திக்கத் தொடங்கின. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் அக்டோபர் 10ஆம் தேதியன்று சி.என்.பி.சி. டிவி 18 நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அப்போது அவர், “ஒன்றுமில்லாத காரணங்களுக்காக சிலர் நானோ காரை குறிவைத்துச் செயல்படுகின்றனர்.

டாடா இண்டிகா கார் மட்டுமே லாபம் ஈட்டி வருகிறது. மற்ற அனைத்து வாகனங்களுமே இழப்புகளையே ஏற்படுத்தி வருகின்றன. நானோ காரால் இழப்பு ஏற்படுவது உண்மைதான். ஆனால், ஓராண்டுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் ஏற்படுத்தும் இழப்புகளில் நான்கு சதவிகித இழப்புகள் மட்டுமே நானோவால் ஏற்படுகிறது. எனவே நானோ உற்பத்தியை நிறுத்திவிடுவதும், அதைத் தொடர்ந்து உற்பத்தி செய்வதும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்குப் பெரிய விஷயம் அல்ல. நானோ உற்பத்தியை நிறுத்தினாலும் இழப்புகளில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை” என்றார்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon