மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

பிரபாகரன் பற்றி ராகுல்

பிரபாகரன் பற்றி ராகுல்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். இப்பயணத்தில் அவர் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரோடும் கலந்துரையாடிவருகிறார். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்துவருகிறார்.

இந்த வகையில், வதோதராவில் நேற்று (அக்டோபர் 9) மாலை தொழிலதிபர்கள் மத்தியில் பேசியபோது, நாட்டின் விலைவாசியை காங்கிரஸால் மட்டுமே கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார். உரையாடலின் இடையே தனது குடும்பத்தைப் பற்றிக் குறிப்பிட்ட ராகுல், “நாங்கள் மகாத்மா காந்தியின் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்கள். எனது தந்தை ராஜீவ் கந்தியைக் கொன்ற பிரபாகரனைச் சடலமாகப் பார்த்தபோது நான் மிகுந்த வேதனையடைந்தேன். என் வேதனையை பிரியங்காவிடம் நான் பகிர்ந்துகொண்டபோது அவரும் மிகுந்த துயரமடைந்தார். மற்றவர்களின் துயரத்தில் பங்குகொள்வதே காங்கிரஸின் கலாச்சாரம்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டார்,

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon