மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

ஆன்லைன் ஆட்சேர்ப்பு அதிகரிப்பு!

ஆன்லைன் ஆட்சேர்ப்பு அதிகரிப்பு!

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை 15 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை குறித்து வேலைவாய்ப்பு வலைத்தளமான மான்ஸ்டர்.காம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில், செப்டம்பர் மாதத்தில் மான்ஸ்டர் வேலைவாய்ப்புக் குறியீடு 282 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. இது 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தை விட 15 சதவிகிதம் அதிகமாகும். மேலும், ஆகஸ்ட் மாதத்தின் குறியீடான 279 புள்ளிகளை விட இது 1 சதவிகிதம் கூடுதலாகும். செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

அதாவது மேற்கூறிய துறைகளில் ஆகஸ்ட் மாதத்தில் 35 சதவிகித உயர்வுடன் இருந்த வேலைவாய்ப்புக் குறியீடு செப்டம்பர் மாதத்தில் 45 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 27 துறைகளில் 22 துறைகள் வேலைவாய்ப்பு வழங்கலில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. பண்டிகை சீசனை முன்னிட்டு வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் அத்துறையில் வேலைவாய்ப்பு 58 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மேலும், இ-காமர்ஸ் எனப்படும் மின்னணு வர்த்தகச் சந்தையிலும் வேலைவாய்ப்புகள் கணிசமாக உயர்ந்துள்ளது.

நகரங்களைப் பொறுத்தவரையில் இரண்டாம் நிலை நகரங்களான பரோடாவில் 23 சதவிகிதமும், கோயம்புத்தூரில் 20 சதவிகிதமும், அகமதாபாத்தில் 14 சதவிகிதமும் வேலைவாய்ப்பு விகிதம் உயர்ந்துள்ளது. முதல்நிலை நகரங்களில் வேலைவாய்ப்பு வளர்ச்சி சரிந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon