மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

உண்மையை மறைக்க முடியாது: ரோஹினி சிங்

உண்மையை மறைக்க முடியாது: ரோஹினி சிங்

தி வயர் இணையதளத்தில் பத்திரிகையாளர் ரோஹினி சிங்.The Golden Touch of Jay Amit Shah' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில், ' மோடி பிரதமராக பதவியேற்றபின், அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் 'டெம்பிள் என்டர்பிரைசஸ்' நிறுவனம் ரூ.50 ஆயிரம் வர்த்தகத்தில் இருந்து ரூ.80 கோடியாக உயர்ந்துள்ளது. 2012-13 ஆண்டில் 6,230 நஷ்டத்தையும் 2013-14-ம் ஆண்டில் டெம்பிள் என்டர்பிரைசஸின் நிறுவனம் 1,724 ரூபாய் நஷ்டம் கண்டுள்ளது. 2014-15-ம் ஆண்டில் 50 ஆயிரம் வருவாயில் நிகர லாபம் ரூ.18,728 பெற்றுள்ளது. 2015-16-ம் ஆண்டில் டெம்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் ரூ.80.50 கோடியை எட்டியுள்ளது. இது, 16 ஆயிரம் மடங்கும் அதிகம். ராஜ்யசபா எம்.பி. பரிமல் நாத்வானியின் உறவினர் ராஜேஷ் கன்ட்வாலா நடத்தி வரும் KIFS நிதி நிறுவனம் எந்தப் பாதுகாப்பு ஆவணங்களையும் பெறாமல், ஜெய் ஷா நிறுவனத்துக்கு ரூ.15 கோடியே 78 லட்சம் கடன் வழங்கி உள்ளது'' எனக் கூறப்பட்டுள்ளது. தன்னைப் பற்றி தவறான செய்தி வெளியிட்டதாக ‘தி வயர்’ இணையதளம் மீது அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷா அவதூறு வழக்கு தொடர்ந்து குறித்து இன்று காலை அப்டேட்டில் நம் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறோம்.

இந்நிலையில் ரோஹினி சிங் தன் முக நூல் பக்கத்தில் நேற்று (9.10.2017) ஒரு வெளிப்படையான பதிவை முன்வைத்திருக்கிறார். அதில் அவர், கூறியுள்ளதாவது: உண்மையை வெளிக்கொண்டு வருவதுதான் என்னுடைய பணி. பத்திரிகையாளரின் பணி, ஆட்சி பீடத்தில் உள்ளவர்களைக் கேள்வி கேட்பது மட்டுமே. 2011ஆம் ஆண்டு ராபர்ட் வதேராவுக்கும் டி.எல்.ஃப்-க்கும் இடையே நடந்த உடன்பாடுகள் குறித்து செய்தி வெளியிட்டபோது எந்தவொரு பின்னடைவையும் நான் சந்திக்கவில்லை.

இப்போது நான் சந்திக்கின்ற பிரச்சினைகள் ஏராளம். அப்போது இப்படியான எந்தச் சிக்கலையும் நான் எதிர்கொள்ளவில்லை. தற்போது என்னுடைய போன் அழைப்புகளை எல்லாம் மூத்த பா.ஜ.க தலைவர் ஒருவர் பதிவு செய்து வருகிறார். அதிகாரத்தை வைத்து மிரட்டவும் துன்புறுத்தவும் தான் முடியும். உண்மைகளை மறைத்துவிட முடியாது. மற்றவர்களால் அடக்கப்படும் போது அதையும் மீறி வெளிவருவது மட்டுமே செய்தி, மற்றவை எல்லாம் வெறும் விளம்பரங்கள்தான்' என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.சராசரி பத்திரிகையாளர்கள் வெளியிடப்படும் செய்திகள்போல் நான் எழுதுவதைக் காட்டிலும் பத்திரிகையாளர் வேலையிலிருந்தே நான் விலகிவிடலாம். என்னிடம் இல்லாத பல பண்புகளை இருப்பது போல சித்தரித்து வருகிறார்கள். நான் ஒரு தைரியசாலி என்பதற்காக எல்லாம் இப்படிப்பட்ட செய்திகளை எழுதுவதில்லை. இவ்வாறு ரோகிணி சிங் பதிவிட்டுள்ளார்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon