மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோலா?

ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோலா?

நாடுமுழுவதற்கும் ஒரே சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. கடந்த ஜூலை மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதைமத்திய அரசு சாதனையாக கொண்டாடும் நிலையில்… எதிர்க்கட்சிகளும், பொருளாதார அறிஞர்களும் இதுபற்றி பாராட்டு, குறைகள் என்று இருவேறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்.,, நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகளில் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் பல்வேறு வரிகளை விதிப்பதால் அவற்றின் விலை உயர்ந்துகொண்டே போகிறது. இதைக் குறிப்பிட்ட பலர், ஜி.எஸ்.டி, வரி வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்களையும் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையே நேற்று புதுடெல்லியில், உலக அளவிலான எண்ணெய் நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘’பெட்ரோலியப் பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி மாநில அரசுகளுடன் விவாதித்து முடிவெடுப்போம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்புக்கு இடையே குஜராத் மாநில அரசு பெட்ரோல் மீது போட்டிருந்த மதிப்புக் கூட்டு வரியை ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon