மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

இந்தியாவின் அதிரடிப் பயணம் தொடருமா?

இந்தியாவின் அதிரடிப் பயணம் தொடருமா?

ஆஸ்திரேலியா அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி, 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, 1-0 என முன்னிலையில் உள்ளது.

இரண்டாவது போட்டி கவுகாத்தியில் இன்று (அக்டோபர் 10) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இது பர்சபரா மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டியாகும். இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, ஷிகர் தவன் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்குக் கூடுதல் பலமாகும். மிடில் ஆர்டரில் களமிறங்கும் மணீஷ் பாண்டேவுக்கு, முதல் போட்டியில் பேட்டிங் கிடைக்கவில்லை. எனவே இந்திய அணியில் தனது இடத்தைத் தக்க வைக்க, இந்தப் போட்டியில் தனது திறமையை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

தோள்பட்டை காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் வெளியேறினார். இதனால் டேவிட் வார்னர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு தக்கப் பதிலடி கொடுக்கக் காத்திருக்கிறது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் பெரும்பாலானோர் ஐபிஎல் போட்டிகளில் ஆடியதன் மூலம் இந்திய ஆடுகளங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். எனினும் அவர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கத் திணறி வருகின்றனர். தொடக்க வீரரான ஆரோன் ஃபிஞ்ச் நல்ல ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் நாதன் கோல்ட்டர் நைல் சிறப்பாக செயல்படுகிறார். இதுவரையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத் தொடர்ந்து ஏழு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியை ஆஸ்திரேலியா வென்று, தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? இல்லை, இந்தியாவின் இந்த அதிரடிப் பயணம் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon