மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

வீடமைப்புத் துறை 27% வளர்ச்சி!

வீடமைப்புத் துறை 27% வளர்ச்சி!

மலிவு விலை வீடுகள் கட்டுமானத் துறை 27 சதவிகித வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் புதிய வீடுகள் கட்டுமானத்தின் மொத்த வளர்ச்சி 33 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து குஷ்மேன் & வேக்ஃபீல்ட் ஆலோசனை நிறுவனம் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் ஒரு ஆய்வை நடத்தியிருந்தது. இந்த ஆய்வறிக்கையில், “மலிவு விலையில் புதிய வீடுகளைக் கட்டமைப்பதில் வீடமைப்புத் துறை கடந்த ஆண்டைவிட 27 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், புதிய வீடுகள் கட்டமைப்பதில் மொத்தமாக 33 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் (ஜனவரி - செப்டம்பர்) 60,000 யூனிட் வீடுகள் விற்பனையாகியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

மும்பையைத் தவிர மற்ற அனைத்து நகரங்களிலும் புதிய வீடுகளைக் கட்டமைப்பதில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டுவரப்பட்டதும், ஜி.எஸ்.டி. சட்டம் அமல்படுத்தப்பட்டதுமே முக்கியக் காரணமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மலிவு விலை வீடுகளைக் கட்டமைப்பதில் ஹைதராபாத்தில் 813 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 331 சதவிகிதம் வளர்ச்சியுடன் மும்பை உள்ளது. கொல்கத்தாவில் குறுகிய அளவிலான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு, டெல்லி, புனே ஆகிய நகரங்களில் புதிய வீடுகள் கட்டமைப்பதில் சரிவு ஏற்பட்டுள்ளது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon