மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

விக்ரம் மகனுக்குக் கிடைத்த ஜோடி!

விக்ரம் மகனுக்குக் கிடைத்த ஜோடி!

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடிக்கும் தகவல் வெளியாகிப் பரபரப்பு அடங்குவதற்குள் அப்படத்தை பாலா இயக்குகிறார் என்ற செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. துருவ்வுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த வேளையில் ஸ்ரேயா ஷர்மா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

ஸ்ரேயா ஷர்மா தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். சூர்யா-ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்திருந்தார். இது தவிர எந்திரன் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும், கௌதம் மேனனின் நீதானே பொன் வசந்தம் படத்திலும் நடித்திருக்கிறார். 2016இல் தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற `நிர்மலா கான்வென்ட்' படத்தில் நடித்தவர், நீண்ட இடைவேளைக்குப் பிறகு இதில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக் குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது. இப்படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon