மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

சினிமாவுக்கு வருகிறார் வைகோ

சினிமாவுக்கு வருகிறார் வைகோ

தமிழக அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலமாக பணி செய்து வரும் அரசியல் கட்சித் தலைவர்களில் சினிமா தொடர்பில்லாமல் இருப்பவர் வைகோ. ஒரு படத்தையும், நாடகத்தையும், புத்தகத்தையும் சிலாகித்துப் பேசும் வைகோவை ரசிகனாக எத்தனையோ மேடையில் அடையாளம் கண்டிருக்கும் தமிழகம், முதல் முறையாக சினிமாவின் பொறுப்பில் வைத்துப் பார்க்கப்போகிறது.

நேற்று (அக்டோபர் 9) நாரத கான சபாவில் வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடத்திக் காட்டினார்கள். இவ்விழாவில் நாசர், விஷால், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருடன் வைகோவும் கலந்துகொண்டு சிறப்பித்தார். நாடகம் முடிவடைந்ததும் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வேலு நாச்சியாரின் புத்தகத்தை வெளியிட்ட வைகோ, இந்த பொக்கிஷத்தை திரைப்படமாக எடுத்து தமிழக மக்களுக்கும், உலகத்துக்கும் கொடுக்கவேண்டும் என்றும், அந்தப் பொறுப்பை நானே ஏற்று ‘கண்ணகி ஃபிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தயாரிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். இந்நிகழ்வு குறித்த முழுத் தகவல்களை இன்று மாலை7 மணி அப்டேட்டில் காணலாம்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon