மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம்!

உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம்!

உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய இந்தக் காவல் நிலையத்துக்கு எஸ்.பி.எஸ். (ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன்) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதில் புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளைப் பொதுமக்கள் பெற முடியும்.

இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில் காத்திருப்புப் பகுதி, கண்காட்சிப் பகுதி, சேவைப் பகுதி என 3 முக்கியப் பிரிவுகள் உள்ளன. இங்கு வரும் மக்கள், ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தின் முகப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் இயந்திரத்தில், தாங்கள் எந்தச் சேவையை பெற வந்திருக்கிறோம் என்பதைக் கூறி, அதற்கான டோக்கனைப் பெற்றுக்கொண்டு, காத்திருப்பு அறையில் காத்திருக்க வேண்டும். அவர்கள் முறை வந்ததும், திரையில் தோன்றும் காவலரிடம் புகாரைத் தெரிவிக்கலாம். காணொலிக் காட்சி மூலம் 24 மணி நேரமும் போலீஸ் அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம்.

ஸ்மார்ட் போலீஸ் நிலையத்துக்கு வரும் மக்களின் உதவிக்காக தற்போது அங்கு 2 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்த முழுமையாகத் தெரிந்துகொண்டபின் 2 போலீசாரும் அங்கிருந்து விலக்கிக்கொள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon