மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

வெங்காயம்: உற்பத்தி சரிவால் விலையுயர்வு!

வெங்காயம்: உற்பத்தி சரிவால் விலையுயர்வு!

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்த கனமழையால் வெங்காய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

வெங்காய வரத்துத் தட்டுப்பாட்டால் மகாராஷ்டிராவில் உள்ள லாசல்கான் சந்தையில் கடந்த 6 நாட்களில் வெங்காய விலை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தச் சந்தையில் அக்டோபர் 3ஆம் தேதி வெங்காயம் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,610 ஆக இருந்தது. இதன் மதிப்பு திங்கட்கிழமையன்று (அக்டோபர் 9) குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து லாசல்கானைச் சேர்ந்த நிதின் ஜெயின் என்ற வர்த்தகர் கூறும்போது, "கர்நாடகாவில் வெங்காய உற்பத்தி சரிந்துள்ளதால் தற்போது வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக வெங்காயத்தின் விலை தோராயமாக தினசரி ரூ.200 அதிகரித்து வருகிறது" என்றார்.

இந்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் வெங்காயத்தின் குறைந்தபட்ச விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.1,826ஆகவும் வரையறுத்துள்ளது. ஆனால் திங்கட்கிழமையன்று இதன் மதிப்பு குறைந்தபட்சமாக ரூ.1,200ஆகவும், அதிகபட்சமாக ரூ.2,731ஆகவும் இருந்தது. மேலும், அடுத்த வாரத்தில் வரவிருக்கின்ற தீபாவளிப் பண்டிகையின் போது வெங்காயத்தின் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,800 முதல் ரூ.3,200 வரை இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon