மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 22 பிப் 2020

தீபிகாவைத் தோற்கடித்த ஜோஷ்னா

தீபிகாவைத் தோற்கடித்த ஜோஷ்னா

அமெரிக்கவில் நடைபெறும் சர்வதேச ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்க ஓப்பன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அமெரிக்காவின் பிலாடெல்பியா நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா தனது முதல் சுற்றில் இந்தியாவைச்சேர்ந்த மற்றொரு வீராங்கனையான தீபிகா பல்லிக்கலுடன் மோதினார்.

பரபரப்பான இந்த போட்டியில் , 7-11, 11-8, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் ஜோஷ்னா சின்னப்பா வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஜோஷ்னா தனது 2ஆவது சுற்றில் எகிப்து நாட்டின் நெளரான் கோஹரை சந்திக்கிறார்.

கடந்த மாதம் நடைபெற்ற சீன ஓப்பனில் தீபிகாவும், ஜோஷ்னாவும் மோதியதில் அதிலும் ஜோஷ்னா வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon