மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

ரஜினி இறைத் தன்மையின் மறு உருவம்!

ரஜினி இறைத் தன்மையின் மறு உருவம்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் காலா படத்தில் இணைந்துள்ள அஞ்சலி பாட்டில் தனது படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். இறைத் தன்மையின் மறு உருவமாக இருக்கிறார் என ரஜினியை அஞ்சலி புகழ்ந்துள்ளார்.

பா.ரஞ்சித் ரஜினியை இயக்கும் இரண்டாவது படமான காலா குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பேசிய அஞ்சலி, “ரஜினி நடிக்கும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி கையெழுத்து போடும்போது அடைந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை. இது வெறும் படம் அல்ல, என் திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு. அவரோடு இணைந்து பணியாற்றும் அனுபவம் முக்கியமானது. ரஜினி போன்ற சில மனிதர்கள் தான் தேவதைக்கதைகளில் வருபவர்களை ஒத்திருப்பர். அவர் இறைத் தன்மையின் மறு உருவமாக இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு இந்த படம் மூலம் அறிமுகமாகும் அஞ்சலி படப்பிடிப்பு தளத்தின் அனுபவங்களை பற்றி கூறும் போது, “தமிழ் சினிமாவின் பணியாற்றும் அனுபவம் புதுமையாக இருக்கிறது. இங்குள்ள வேலை கலாச்சாரம் வித்தியாசமாக உள்ளது. ஆரம்பத்தில் இதை சமாளிக்க சிரமப்பட்டேன். ஆனால் இந்த படத்தில் பணியாற்றுவது நல்ல கற்றுக்கொள்ளும் அனுபவமாக உள்ளது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் போதும் 500 பேர் திரண்டிருந்து படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதுவே பெரிய அனுபவம்” என்று கூறியுள்ளார்.

மும்பையில் சேரிப்பகுதியின் தலைவராக இருக்கும் ரஜினி கேங்ஸ்டராக மாறி ஒடுக்கப்படும் தமிழ் மக்களுக்காக போராடும் விதமாக கதை உருவாகியுள்ளது. தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நானா படேகர், ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon