மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

உலக மனநல தினம் 2017

உலக மனநல தினம் 2017

எண்ணங்களைப் பொறுத்துதான் வாழ்க்கை.

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். இவர்களில் 15 முதல் 44 வயதுக்குட்பட்டோரே அதிகம். இந்த நிலையில் உடலால் நன்றாக இருந்து, மனதால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்க வலியுறுத்தியே அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது

மனம் மிகவும் வலிமையானது. நம்மை வெகு தூரத்துக்குக் கொண்டு செல்லவோ அல்லது அதள பாதாளத்துக்குத் தள்ளவோ முடியும

ஒவ்வொரு 40 விநாடியும் உலகத்தில் எவரோ ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றார். குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் தற்கொலைக்கு உட்படுகின்றனர். அதிகமான மக்களுக்கு உளவியல் மற்றும் மனநல முதலுதவி அளிப்பதன் மூலம் தற்கொலை எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடியும். வீடு, பள்ளிகள், பணியிடங்கள், போக்குவரத்து, வணிக சந்தைகள், பொது இடங்கள், மருத்துவமனைகள், ராணுவ இடங்களில் உளவியல் மற்றும் மனநல பிரச்னைகள் உருவாகின்றன. உளவியல் மற்றும் மனநல முதலுதவி அடிப்படையில் உயிர்காக்கும் முறையாகும்.

விக்ரம் வேதா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் வசனம் ஒன்று. “பிரச்னையைப் பார்க்காதே... பிரச்னைக்கான காரணத்தைப் பாரு” என்பதாகும். ஆக, இம்மனநல பிரச்னை ஏற்பட காரணமானவற்றை கண்டறிவோமா...

பெரும்பாலும் மனநலம் பாதிக்கக் காரணங்கள்:

மனக்கலக்கம், தனிமை, சகவாச நெருக்கடி, சுயமரியாதைக் குறைவு, குடும்பத்தில் மரணம் அல்லது மண விலக்கு ஆகிய சூழ்நிலை அழுத்தங்கள்.

விபத்து, காயம், வன்முறை, வன்புணர்ச்சி ஆகியவற்றால் உண்டாகும் உளவியல் அதிர்ச்சிகள்.

மூளைக்காயம் / குறைபாடு.

மது, போதைப் பழக்கம்.

தொற்றால் உண்டாகும் மூளைச் சிதைவு.

குடும்ப பிரச்னை.

வேலையில்லா நிலை.

ஏமாற்றம்.

செக்ஸ் பிரச்னை

ஏக்கம், தோல்வி.

பாதுகாப்பாற்ற உணர்வு.

சந்தேகப் புத்தி.

போட்டி மற்றும் பொறாமை.

தவறான சேர்க்கை.

அறியாமை.

புரிதல் குறைவு.

பாகுபாடு.

மாறா வடு.

மன நோயின் அறிகுறி.

மன நோய்க்கு உடல் அறிகுறி மற்றும் மன அறிகுறி என இரு

காரணங்கள் இருக்கின்றன.

உடல் சோர்வு.

பசியின்மை.

தலைவலி.

ஜீரணப் பிரச்னை போன்றவை.

உடல் அறிகுறி.

பய உணர்வு.

விபரீத கற்பனை.

தேவையில்லாத சிந்தனை

மன கலக்கம்.

நம்பிக்கையற்ற உணர்வு.

எதிர்மறையான எண்ணங்கள்.

குற்ற உணர்வு.

மற்றவர்கள் மதிக்காதது போல் உணர்தல்.

உதவிக்கு யாருமில்லாதது போல் உணர்தல்.

தற்கொலை எண்ணம் மற்றும் தற்கொலைக்கு முயற்சி செய்தல்.

இவை மன அறிகுறிகளாக இருக்கின்றன.

இந்தச் சூழல்கள் நம்மில் தென்படின் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை சுய பரிசோதனை செய்து தெரிந்து கொள்வோம்.

முகநூல் கமென்ட்டில் யாரேனும் ஏதாவது சொன்னாலோ அல்லது லைக் வரவில்லை என்பதற்காகவோ, அலுவலகத்தில் தீபாவளி போனஸ் பேச்சுவார்த்தையினால் கடுப்பாகி வீட்டில் இருப்போரிடம் எரிந்து விழுவதோகூட ஒருவகையில் மனநலம் பாதிப்பு தன்மையே.

அதாவது சட்டையை கிழித்கொண்டும், தனியாக பேசி கொண்டும் இருப்பவர்கள்தான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றில்லை.

இணையத்தில் உழன்று இயல்பினை மறந்து, அன்பினை விதைக்காமல் புதைத்துக்கொண்டிருப்பவர்களும் மனநலம் பாதிக்கப்பட்டோரே.

மீண்டெழுந்து வருவோம். மகிழ்வித்து மகிழ்வோம்.

இந்த உலக மனநல தினத்தில் அனைவரின் மனங்களும் ஆரோக்கியமும் நிம்மதியும் அடைந்திட வாழ்த்துகள்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon