மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

ஒரு பார்வை பார்த்தாலே - பியூட்டி ப்ரியா

ஒரு பார்வை பார்த்தாலே - பியூட்டி ப்ரியா

‘என்னவளின் இதழும் திருக்குறள்தான் - இரண்டு வரிகளில் எத்தனை பாடங்கள்’ என்று வர்ணித்தவர்கள் திருமணமானதும் ‘என்னவளும் திருக்குறள் தான் - இரண்டே அடியில் உலகத்தையே புரியவைத்து விடுகிறாள்’ என்று கூறி மகிழ்கின்றனர். ஒரு பார்வை பார்த்தாலே வீட்டில் சகலமும் அடங்கிவிடும். அதேபோல ஒரு பார்வை பார்த்தாலே சகலமானவரும் சரணாகதியடைய கண்களுக்கான டிப்ஸ் இதோ.

தேனைக்கொண்டு கரு வளையங்களை எப்படிப் போக்குவது என்று காண்போம்.

தேன்

தேன் மிகச்சிறந்த மாய்ஸ்சுரைசர், டோனர் மற்றும் கிளின்சர். இந்த தேனைத் தினமும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால் கரு வளையம் நீங்கி, கண்களும் பொலிவோடு இருக்கும்.

தேன் மற்றும் வெள்ளரிக்காய்

1:2 என்ற விகிதத்தில் வெள்ளரிக்காய் சாறு மற்றும் தேனை எடுத்து நன்கு கலந்து, அதைக்கொண்டு தினமும் தடவி ஊற வைத்து கழுவி வரவும். இப்படி ஒரு மாதம் செய்துவந்தால், உங்கள் கண்கள் கவர்ச்சிகரமாக காணப்படுவதை நீங்கள் காணலாம்.

தேன் மற்றும் பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்க்கு சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அத்தகைய பாதாம் எண்ணெய் அரை டேபிள்ஸ்பூன், தேனில் 4-5 துளிகள் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி அரை மணிநேரம் ஊறவைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் கரு வளையம் விரைவில் நீங்கும்.

தேன் மற்றும் வாழைப்பழம்

வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் சேர்த்து கலந்து, அக்கலவையைக் கண்களைச் சுற்றி தடவி அரை மணிநேரம் ஊறவைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கரு வளையங்கள் நீங்குவதோடு, கண்களில் உள்ள வீக்கமும் போகும்.

தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு

எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, கருமையைப் போக்கும். அதற்கு தேன் மற்றும் எலுமிச்சைச் சாற்றினை சரிசம அளவில் எடுத்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால், கரு வளையங்கள் விரைவில் அகலும்.

பியூட்டி ப்ரியா 01

பியூட்டி ப்ரியா 02

பியூட்டி ப்ரியா 03

பியூட்டி ப்ரியா 04

பியூட்டி ப்ரியா 05

பியூட்டி ப்ரியா 06

பியூட்டி ப்ரியா 07

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon