மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

ரோட்டைக் காணவில்லை!

ரோட்டைக் காணவில்லை!

‘20 அடி ரோட்டை காணவில்லை’ என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் என்.எஸ்.கே.நகர் 2ஆவது தெருவிலுள்ள 20 அடி ரோட்டையும், கான்கிரீட் பாலத்தையும் காணவில்லை எனவும், அதை விரைவில் கண்டுபிடித்துத் தருமாறும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், “அரசியல் செல்வாக்குள்ள நபரின் பிடியில் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி பொதுமக்களுக்குச் சொந்தமான ரோட்டையும், பாலத்தையும் இழந்துள்ளோம். இதனால் அந்தப் பகுதியில், மழை பெய்தால் தண்ணீர் போக வழியின்றி, அப்படியே தேங்கி நின்றுவிடுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலையேற்பட்டுள்ளது” என்றனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் ஆக்கிரமிப்புக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon