மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

பணமதிப்பழிப்பு குறித்து அருந்ததி பட்டாச்சார்யா!

பணமதிப்பழிப்பு குறித்து அருந்ததி பட்டாச்சார்யா!

பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் முன்னாள் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மும்பையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த அருந்ததி பட்டாச்சார்யா அக்டோபர் 7ஆம் தேதியன்று பணி ஓய்வு பெற்றார். அவருக்குப் பிறகு ராஜ்னிஷ் குமார் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். அருந்ததி பட்டாச்சார்யா அண்மையில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழுக்குப் பேட்டியளித்திருந்தார். இந்தப் பேட்டி அக்டோபர் 9ஆம் தேதியன்று வெளியாகியிருந்தது.

இந்தப் பேட்டியில் அவர் தனது பணிக்காலத்தின் இறுதி ஆண்டு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “ஜி.எஸ்.டி., பணமதிப்பழிப்பு, வங்கி இணைப்பு போன்று முழுக்க முழுக்க முக்கிய நிகழ்வுகள் ஏற்பட்ட ஒரு வருடமாக என் இறுதி ஆண்டு அமைந்தது. தொடர்ந்து நாங்கள் விதிமுறைகளை உருவாக்கவும், மாற்றியமைக்கவும் நேர்ந்தது” என்று அவர் கூறினார்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon