மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

கம கம காரக் குழம்பு - கிச்சன் கீர்த்தனா

கம கம காரக் குழம்பு - கிச்சன் கீர்த்தனா

கோதுமை அல்வாவில் கோந்தை ஊற்றி விளையாடும் குழந்தைகளை அருகில் வைத்துக்கொள்ளாமல் சமையல் செய்வது மிகச் சிறந்ததாகும்.

சரி... இன்று கம கம காரக் குழம்பும் கிரீன் வெஜிடபுள் ரைஸும் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

கம கம காரக் குழம்பு

தேவையானவை: புளி - 50 கிராம், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 10 பல், காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம் - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை அரை கப் தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், வெந்தயம், கடலைப்பருப்பு ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கி கொள்ளவும். பிறகு, வடிகட்டிய புளித் தண்ணீர்விட்டு, குழம்பு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்துவரும் சமயத்தில், கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் சிறந்த காம்பினேஷன்!

கிரீன் வெஜிடபிள் ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி - அரை கிலோ, கேரட் துருவல், பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது) - தலா ஒரு கப், வெங்காயம், குடமிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 10, பச்சை மிளகாய் - 3, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் ஒரு பங்கு பாசுமதி அரிசிக்கு, இரு பங்கு தண்ணீர் விட்டு இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸைப் பொடியாக நறுக்கவும். கடாயில், நெய் விட்டு நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, கேரட் துருவல், நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய பீன்ஸ், பட்டாணி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். காய்கள் சரியான பதத்தில் வெந்ததும், புதினா சேர்த்து கலந்து இறக்கவும். அதில், சாதம் போட்டுக் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும். இதற்கு, தயிர் பச்சடி சூப்பர் சைட் டிஷ்.

கீர்த்தனா தத்துவம்

ஆசிரியர் பேசுறது புரியலைன்னா வாயை திறந்து சந்தேகத்தை கேட்டுடணும்!

மனைவி பேசுறது புரியலைன்னா வாயை மூடிகிட்டு சத்தமில்லாம போயிடணும்!

வாழ்க்கைல நல்லா வருவீங்க!

கிச்சன் கீர்த்தனா 01

கிச்சன் கீர்த்தனா 02

கிச்சன் கீர்த்தனா 03

கிச்சன் கீர்த்தனா 04

கிச்சன் கீர்த்தனா 05

கிச்சன் கீர்த்தனா 06

கிச்சன் கீர்த்தனா 07

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon