மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 19 செப் 2019

நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை (அக்டோபர் 11) காலை 11 மணிக்குக் கூடுகிறது.

ஏழாவது ஊதியக் குழுவின் இறுதி அறிக்கை கடந்த வாரம் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பாகவும், இடைக்கால நிவாரணத் தொகை எத்தனை சதவிகிதம் வழங்குவது என்பது குறித்தும் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், தமிழகத்தை டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திவரும் நிலையில், டெங்குவைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அதில் கலந்து ஆலோசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

சசிகலாவின் பரோல் புதன்கிழமையோடு முடிவடையும் நிலையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon