உகாண்டாவின் கொடூரமான போர் குற்றவாளியைக் கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி பணயம் வைக்கப்பட்ட தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பல ஆவணங்களை இணையத்தில் வெளியிட்டது பிரான்ஸ் நாட்டின் இன்வெஸ்டிகேடிவ் வலைத்தளமான ‘மீடியாபார்ட்’. வெளியான ஆவணங்களில் மிக முக்கியமான ஒன்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் லூயிஸ் மோரேனோ ஓகம்போவின் மின்னஞ்சல் தகவல். அதில் அவர், “ஆப்பிரிக்காவின் மிகவும் மோசமான போர் குற்றவாளியாக வலம்வந்த ஜோசப் கோனியை கைதுசெய்ய உதவ ஏஞ்சலினா ஜோலி தானாக முன்வந்ததையடுத்து மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டுக்கு அவருடைய முன்னாள் கணவர் பிராட் பிட் மாற்றும் அமெரிக்க சிறப்பு படை வீரர்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட தகவலை பதிவு செய்துள்ளார்.”
மனித உரிமை மீறல் குற்றங்கள் புரிந்ததற்காக ஜோசப்பை கைது செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. மேலும் அவருடைய தலைக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பரிசு நிர்ணயிக்கப்பட்டது. ஜோசப் இன்றும் மேற்கு சூடான் மற்றும் சூடானின் எல்லைகளில் பதுங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.
இணையத்தில் ஆவணங்கள் வெளியானது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஏஞ்சலினா ஜோலி தரப்பில் எந்தவித கருத்துகளும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.