மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

நிலக்கரி இறக்குமதி 10% உயர்வு!

நிலக்கரி இறக்குமதி 10% உயர்வு!

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக எம்.ஜங்சன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜங்சன் சர்வைசஸ் என்ற இணையதளம் வாயிலாக நிலக்கரி கொள்முதல் மற்றும் விற்பனை போன்ற சேவைகளை அரசுக்குச் சொந்தமான செயில் நிறுவனமும் டாடா ஸ்டீல் நிறுவனமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. எம்.ஜங்சன் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியா 18.33 மில்லியன் டன் அளவிலான நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் இறக்குமதி செய்யப்பட்ட 16.73 மில்லியன் டன் அளவிலான நிலக்கரியை விட 9.5 சதவிகிதம் கூடுதலாகும்.

நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில் நிலக்கரி இறக்குமதி 19.63 மில்லியன் டன்னிலிருந்து 19.08 மில்லியன் டன்னாகக் குறைந்திருந்தது. அதைத் தொடர்ந்த மே மாதத்தில் 19.38 மில்லியன் டன்னிலிருந்து 18.38 மில்லியன் டன்னாகவும், ஜூன் மாதத்தில் 21.50 மில்லியன் டன்னிலிருந்து 18.22 மில்லியன் டன்னாகவும், ஜூலை மாதத்தில் 19.15 மில்லியன் டன்னிலிருந்து 14.64 மில்லியன் டன்னாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 19.75 மில்லியன் டன்னிலிருந்து 18.80 மில்லியன் டன்னாகவும் குறைந்தது. இந்நிலையில் மின் உற்பத்தி ஆலைகளில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக செப்டம்பர் மாதத்தில் நிலக்கரி இறக்குமதி அதிகரித்திருக்கிறது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது