மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

மாநகர பூங்காக்களில் மனித நேயர் வாசனை!

 மாநகர பூங்காக்களில் மனித நேயர் வாசனை!

விளம்பரம்

கிராமங்கள் என்றால் எங்கு பார்த்தாலும் பூங்காக்கள் மாதிரிதான் பசுமையாக இருக்கும். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கொல்லையிலும் பூங்காக்கள் பசுமை சூடிக் கொண்டிருக்கும். ஆனால் சென்னை போன்ற மாநகரங்கள் பரவலாக கான்கிரீட் மயமாகி வரும் நிலையில்... மாநகராட்சிப் பூங்காக்கள் மட்டுமே மன அமைதி நிலையங்களாக மாறியிருக்கின்றன.

மே தினப் பூங்கா, பனகல் பூங்கா, நாகேஸ்வர ராவ் பூங்கா, ஜீவா பூங்கா என்று பரபரப்பான சென்னையை பதப்படுத்தும் ரசவாதத்தை நிகழ்த்தி வருபவை பூங்காக்கள்தான்.

சென்னை பூங்காக்கள் பற்றி ஒரு சிறு உலா போய்விட்டு வரலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சி யில் மொத்தம் 525 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதில் பெரிய பூங்காக்களாகிய ராயபுரத்தில் உள்ள அண்ணா பார்க், இராஜாஜி சாலையில் உள்ள தலைமை செயலக பூங்கா, பெரம்பூரில் உள்ள பெரம்பூர் மேம்பால பூங்கா, பெரியமேட்டில் உள்ள மைலேடிஸ் பூங்கா, கோயம்பேட்டில் உள்ள ஜெய் நகர் பூங்கா, எழும்பூரில் உள்ள மேயர் சுந்தரராவ் பூங்கா, தியாகராய நகரில் உள்ள பனகல் பூங்கா, நடேசன் பூங்கா, ஜீவா பூங்கா, நெசப்பாக்கம் ஏரிக்கரை பூங்கா, அடையாரில் உள்ள இந்திரா நகர் பூங்கா. அண்ணா நகரில் உள்ள டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா, சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே டே பூங்கா, நுங்கம் பாக்கத்தில் உள்ள சுதந்திர தின பூங்கா, கே. கே. நகரிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பூங்கா மற்றும் மைலாப்பூரில் உள்ள டாக்டர் நாகேஸ்வர ராவ் பூங்கா ஆகியவை முக்கிய பூங்காக்கள் ஆகும்.

இதில் சுதந்திர தினப்பூங்கா பனகல் பூங்கா, நடேசன் பூங்கா, சிவன் பார்க் (Dr.M.G.R.) பூங்கா, இந்திரா நகர் பூங்கா. டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்காக்களில் வண்ண விளக்குகள் , நீரூற்றுகள் ஆகியவை அமைத்து பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

மனித நேயர் மேயராக இருந்த கால கட்டத்தில் இந்த பூங்காக்களை முன்னேற்றவும், அதன் மூலம் மாநகரின் சூழலை அழகுபடுத்தவும் பல திட்டங்களைத் தீட்டினார்.

ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

பூங்காக்களை தத்தெடுத்தல்!

சென்னை மக்களுக்கு பயன்படும் பூங்காக்களை பராமரித்தலில் மாநகராட்சிக்கு நிறைய செலவாகிறது.அதேநேரம் பல தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் தத்தமது பகுதிகளில் இருக்கும் மாநகராட்சிப் பூங்காக்களை தாங்களே பராமரிக்க முன் வரத் தயாராக இருக்கிறார்கள் என்பது குறித்து அறிந்தார் மேயர்.

நல்லதொரு நிர்வாகத்துக்கு இதுதான் சான்று. தனியாரின் இந்த மனநிலையை அறிந்த மாநகராட்சி நிர்வாகம், சென்னையில் காலியாக உள்ள இடங்களில் பூங்காக்களை அமைக்கவும், இருக்கும் பூங்காக்களை பராமரிக்கவும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது.

சென்னை மாநகராட்சிப் பணிகள் குறித்து, அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்றது. அதில் பூங்காக்கள், சாலை மையத் தடுப்புகள், சாலையோர பூங்காக்கள், போக்குவரத்து தீவுத்திட்டுகள் மற்றும் திறந்தவெளி நிலங்களில் பூங்காக்கள் அமைத்து பராமரிக்கும் பணிக்கு தனியார் நிறுவனங்கள் முன்வந்தால் ஏற்றுக்கொள்வது எனவும், அதற்கு ஆகும் செலவை விளம்பரங்கள் செய்து, அதன் மூலம் அவர்கள் ஈடு செய்துகொள்ளலாம் என்றும், அதற்கான ஒருங்கிணைப்பு அலுவலரும் நியமிக்கப்படுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது.

மதுக்கூடங்கள் மாறி பொதுக்கூடங்கள்!

பல மாநகராட்சிப் பூங்காக்கள் மாலை இருட்டிய பின்னும்,காலை அரும்பிய பின்னும், மதிய வேளைகளிலும் அறிவிக்கப்படாத மதுக் கூடங்களாக இருந்த நிலையில் மனித நேய மேயரின் நிர்வாகத்தில் பூங்கா பராமரிப்பு முறையாக செய்யப்பட்டதால்... மதுக் கூடங்களாக இருந்த நிலை மாறி அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் பொதுக் கூடங்களாக மாறின.

பூங்காக்களில் வைஃபை!

மரம் செடி, கொடி மட்டுமல்ல...மாநகராட்சிப் பூங்காக்களில் விஞ்ஞானமும் முளைக்க வேண்டும் என்று விரும்பினார் மாநகர மேயர். இந்த நிலையில் பூங்காவிற்கு வரும் பொதுமக்களை மேலும் கவர்ந்திழுக்கும் வகையிலும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் மாநகராட்சி பராமரிப்பில் உள்ள 525 பூங்காக்களிலும் ‘வை-பை’ வசதி வழங்க நடவடிக்கை எடுத்தார் மனித நேய மேயர்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறியபோது, வைஃபை கட்டணம் குறித்து அரசு தான் நிர்ணயம் செய்ய வேண்டும்.

மாநகராட்சி பூங்காக்கள், மெரினா கடற்கரையில் வை-பை வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார். முழுமையான நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கும் இந்தத் திட்டத்தில், மனித நேயரின் விஞ்ஞான வாசனை வீசுகிறது.

சென்னை பூங்காக்களில் விரைவில் வை-பை வசதி வர இருப்பதால் இளைஞர்கள், தொழில் சார்ந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் அதிகளவு கூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

பூங்கா என்றால் அழகு மட்டுமே என்ற அர்த்தத்தை மாற்றி சென்னை மாநகராட்சிப் பூங்காக்களை இன்னொரு முக்கிய பயன்பாட்டுக்காக திட்டமிட்டவர் மனித நேயர். அது என்னவென்று காத்திருந்து பார்ப்போம்!

கருத்துகளை தெரிவிக்க... [email protected]

வளரட்டும் மனித நேயம்

விளம்பர பகுதி

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon