மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

கோரக்பூர்: 16 குழந்தைகள் மரணம்!

கோரக்பூர்: 16 குழந்தைகள் மரணம்!

கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 16 குழந்தைகள் மரணமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ளது பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை இல்லாமல் ஒரே வாரத்தில் 63 குழந்தைகள் மரணமடைந்தன. இந்தச் சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16 குழந்தைகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், பிறந்து சில மணி நேரங்களே ஆன 10 குழந்தைகளும் அடங்கும் . ஆக்சிஜன் குறைபாடு காரணமாகவோ, சிகிச்சை காரணமாகவோ இந்த மரணங்கள் நிகழவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மரணமடைந்த குழந்தைகள் மிகவும் ஆபத்தான கட்டத்திலேயே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இச்சம்பவத்தையடுத்து மருத்துவமனைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. ஒரே மருத்துவமனையில் தொடர்ச்சியாக குழந்தைகள் மரணம் அதிகரித்து வருவது அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon