மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்!

 பாஜகவுக்கு எதிராக  காங்கிரஸ் போராட்டம்!

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மகன் ஜெய் அமித் ஷா நடத்தும் தொழிலின் ஆண்டின் நிகர வருமானமானது, முந்தைய ஆண்டைவிட 16,000 மடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள்.

பாஜகவின் மெகா ஊழலாகக் கருதப்படுகிற அமித் ஷா, ஜெய் ஷா விவகாரத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது காங்கிரஸ் டெல்லி தலைமை. பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒரே அணியில் திரட்டி வலுவான போராட்டம் நடத்தவும் தேசியக் கட்சிகளுடன் ஆலோசனைகள் செய்துவருவதாகச் சொல்கிறார்கள்.

தமிழக காங்கிரஸ் சார்பாக, தமிழகம் முழுவதும் சென்னை அல்லாத இதர மாவட்டத் தலைநகரங்களில் அக்டோபர் 10ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் செய்யவும், அக்டோபர் 11ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்யவும் அழைப்பு விடுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon