மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

ஆசிய பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தங்கம்!

ஆசிய பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தங்கம்!

15 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சமியா தங்கம் வென்றுள்ளார்.

மியான்மர் நாட்டின் ரங்கூன் நகரில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று (அக்டோபர் 8) நடந்த இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையான சமியா இந்தோனிசிய நாட்டின் ஸ்டெபானியை எதிர்கொண்டார். முதல் செட்டை 21 -15 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசிய வீராங்கனை கைப்பற்றிய நிலையில், இரண்டாவது செட்டை சமியா 21-17 என்ற கணக்கில் போராடி தன்வசமாக்கினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனை சமியா 21-19 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தைத் தட்டிச் சென்றார்.

இவர் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து பயிற்சிபெறும் சாய் கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்றுவருகிறார். சமியாக்கு முன் 2012ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற U-19 கிரண்ட் பிரிக்ஸ் தொடரில் பி.வி.சிந்து தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon