மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 அக் 2017

நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு தள்ளுபடி!

நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு தள்ளுபடி!

நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு : உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!

சட்டப்பேரவையில் முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

அதிமுகவின் அணிகள் இணைந்த பிறகு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். ஆனால் ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அதிமுக உட்கட்சி பிரச்னையில் தான் தலையிட முடியாது என்று தெரிவித்ததாக, ஆளுநரிடம் முறையிட்ட தலைவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கூறி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில்," எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாத காரணத்தால், சட்டசபையில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் அது குதிரை பேரத்திற்கு வழிவகை செய்யும்.தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், இதுதொடர்பாக கவர்னருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதுகுறித்தும் கவர்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்,ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் மனுதாரர் பாதிக்கப்பட்டவராகவோ, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியோ இல்லாத காரணத்தால் அவருக்கு வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று( அக்டோபர் 9) மீண்டும்

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

திங்கள் 9 அக் 2017