மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 30 மா 2020

கூடுதலான உணவு தானியங்கள் கையிருப்பு!

கூடுதலான உணவு தானியங்கள் கையிருப்பு!

இருப்பு வைப்பதற்கான விதிமுறை அளவை விட 53 சதவிகிதம் கூடுதலான அளவில் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உணவு தானிய விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவும், சந்தையில் அவற்றின் விலை மாற்றத்தைக் கண்காணிக்கவும் இருப்பு வைத்து பின்னர் அவற்றைப் பயன்படுத்தும் திட்டம் நான்காவது ஐந்தாட்டுத் திட்டத்தின் போது தொடங்கப்பட்டது. உணவு தானியங்களை இருப்பில் வைப்பதில் சில விதிமுறைகளும் உள்ளன. அக்டோபர் 1ஆம் தேதி வரையில் விதிமுறைப்படி 30.77 மில்லியன் டன் அளவிலான உணவு தானியங்கள் மட்டுமே இருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்திய உணவுக் கழகமானது 53 சதவிகிதம் கூடுதலான அளவில் 46 மில்லியன் டன் அளவிலான உணவு தானியங்களை இருப்பு வைத்துள்ளது.

இதில், கோதுமை 27.86 மில்லியன் டன் அளவிலும், அரிசி 18.18 மில்லியன் டன் அளவிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக இந்திய உணவுக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருப்பிலுள்ள உணவு தானியங்களின் அளவு கடந்த ஆண்டைவிட அதிகமாகும். மேலும், உணவு வழங்கல் திட்டத்திற்கான தேவையை விடவும் இருப்பிலுள்ள தானியங்களின் அளவு அதிகமாகும். அதிக இருப்பைக் குறைக்கும் வகையில் இந்திய உணவுக் கழகமானது திறந்த நிலைச் சந்தையில் உணவு தானியங்களை அவ்வப்போது விற்பனை செய்தது. இருப்பினும் விதிமுறை அளவை விடக் கூடுதலான அளவில் இருப்பு இருந்துள்ளது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon