மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்: அஸ்வின்

அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்: அஸ்வின்

இந்திய அணியில் வாய்ப்புக்காகக் காத்திருக்கவில்லை, அது தானாக என்னைத் தேடி வரும் என நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

இந்தியத் தேர்வுக் குழு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடருக்கான இந்திய அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரையும் தவிர்த்துவிட்டு குல்தீப் யாதவ், சஹால், அக்ஷர் படேலுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்துவருகிறது. இதனால் இனிவரும் தொடர்களுக்கு அஸ்வின், ஜடேஜா தேர்வாவது குறித்த சந்தேகம் நிலவுகிறது.

இது குறித்து பத்திரிகையாளர்களுக்கு அஸ்வின் அளித்த பேட்டியில், "நான் இதுவரை ஆடிய ஆட்டங்கள் அனைத்திலும் சிறப்பாகவே ஆடியுள்ளேன். என்னுடைய முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். கூடிய விரைவில் இந்திய அணியில் நான் தேர்ந்தெடுக்கப்படுவேன். வாய்ப்பு கிடைக்காததால் நான் நம்பிக்கை இழக்கவில்லை. ஒருநாள் எனக்கான வாய்ப்புகள் என் கதவைத் தட்டும். ஏனெனில் நான் பெரிய தவறு எதுவும் செய்துவிடவில்லை. ஆகவே, எனக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும்போது என் திறமையின் எல்லையை மேலும் உயர்த்தி அணிக்குப் பங்களிப்பேன்." என்று கூறியுள்ளார்.

இந்திய அணிக்காக அஸ்வின் இதுவரை 111 ஒருநாள் போட்டிகள் விளையாடி150 விக்கெட்களும், 46 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்களும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon