மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!

அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் தாலருக்கு இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, இயற்பியல், மருத்துவம் ஆகிய துறைகளில் மனித இனத்திற்குப் பயன்படும் வகையில் பணியாற்றியோருக்காக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கான நோபல் பரிசை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இன்று (அக்டோபர் 09) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறுபவரின் பெயர் அறிவிக்கப்பட்டது. ஸ்டாக்ஹோமில் நோபல் இலக்கிய பரிசுக் குழுத் தலைவர் சாரா டேனியஸ் அறிவித்தார்.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ரிச்சட் தாலர் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 72 வயதாகும் ரிச்சர்ட், பொருளாதார உளவியல் குறித்து ஆய்வு செய்ததற்காக அவருக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சிகாகோ பல்கலையில் நடைமுறை அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். உளவியல் ரீதியாக முடிவுகள் எடுப்பது தொடர்பான ஆய்விற்காக இந்தப் பரிசு வழங்கப்படுவதோடு, ரூ. 7 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon