மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

பாகுபலிக்குப் போட்டியாக பத்மாவதி

பாகுபலிக்குப் போட்டியாக பத்மாவதி

'பாஜிராவ் மஸ்தானி' படத்தைத் தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் திரைப்படம் பத்மாவதி. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினியின் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கிறார். இதன் ட்ரெய்லரை தீபிகா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (அக்டோபர் 9) வெளியிட்டார்.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்திய பேஷ்வாவாக இருந்த பாஜிராவ், மஸ்தானி ஆகிய இருவருக்குமான காதலை மையமாக வைத்து 'பாஜிராவ் மஸ்தானி' படத்தை இயக்கியிருந்தார் பன்சாலி. மீண்டும் அதே காலகட்டத்தைச் சார்ந்த ராணி பத்மினியின் வரலாற்றுக் கதையைக் கையில் எடுத்து, பத்மாவதி என்ற பெயரில் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கியிருக்கிறார்.

தீபிகா படுகோன் ராணி பத்மினியாகவும், ஷாஹித் கபூர் தீபிகாவின் கணவராக மகாராவாள் ரத்தன் சிங் கேரக்டரிலும் நடித்திருக்கிறார்கள். பத்மினியைக் கவர்ந்து செல்ல முயலும் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங் நடித்திருக்கிறார். இவர்களுடன் அதிதி ராவ், சோனு சூட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்துவருகிறார். இயக்குநராக மட்டுமன்றி இசை, பாடல்கள் பணியையும் பன்சாலியே மேற்கொண்டுள்ளார்.

7500 திரையரங்குகளில் வெளியாகிச் சாதனை படைத்த பாகுபலி படத்தை மிஞ்சும் விதமாக, 8000 திரையரங்குகளில் இதை வெளியிடத் திட்டமிட்டுவருகின்றனர். பன்சாலி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் வைகாம் 18 பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துவரும் இப்படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளிவர உள்ளது.

பத்மாவதி ட்ரெய்லர்

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon