மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

முழுசா சந்திரமுகியான பழனிச்சாமியைப் பார்!: அப்டேட் குமாரு

முழுசா சந்திரமுகியான பழனிச்சாமியைப் பார்!: அப்டேட் குமாரு

‘கங்கா சந்திரமுகி ரூமுக்குள்ள போனா, சந்திரமுகியாவே தன்னை நினைச்சுக்க ஆரம்பிச்சா..’ன்னு ஜோதிகா சந்திரமுகி ஆன கதையை ரஜினி சொல்றது ஞாபகம் இருக்குதா? அது பக்காவா மேட்ச் ஆகுறது நம்ம எடப்பாடியாருக்கு தான். அப்பாவி மக்கள் மீது குண்டர் சட்டம் போடுறதும் போலீஸை வச்சு அடிப்பதும் ‘இந்த ஆட்சியை ஆட்டவோ அழிக்கவோ முடியாது’ன்னு மேடைக்கு மேடை எழுதிவச்சு முழங்குறதும் குட்டிக் கதைகளும் பேனர்களும், கட் அவுட்டுகளும் அந்த அம்மாவை ஞாபகப்படுத்துற மாதிரி தான் இருக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல எம்.எல்.ஏக்கள்லாம் அவர் கார் டயரை தொட்டு கும்பிடுறதும் நடந்தாலும் நடந்துரும் போல. அதுக்கும் ஒரு மீம்ஸ் போட்டு கலாய்ப்போம். வேறென்ன செய்ய முடியும். அப்டேட்ட பாருங்க.

Kozhiyaar

வாழ்க்கையும் கைப்பேசி போலத்தான்!!

மகிழ்ச்சி என்னும் சார்ஜ் அடிக்கடி ஏற்றிக் கொண்டால் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும்!!!

palanikannan

எதிர்க்கட்சிகள் கூக்குரலிட்டாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது-பழனிசாமி

கட்சி பாரபட்சமில்லாம MLA சம்பளத்தை உயர்த்தியதே இதுக்குதான..?

Vinithan

கொசு இனத்தின் பலம் அதிகமாயிருச்சா இல்ல

மனித இனத்தின் எதிர்ப்பு சக்கி ஃவீக் ஆயிருச்சானு தெரியல

டெங்கு

Arjundreams

தமிழ்நாட்ல

ஸ்பைடர் படத்துல வர

எஸ்.ஜே.சூர்யாவா மாறிக்கிட்டுவருது

டெங்கு கொசு

sashi

சிட்டிசன் களை விட நெட்டிசன்களை பார்த்தா தான் இந்த அரசியல்வாதிகளுக்கு கலக்கமா இருக்கும்ல

பாரபட்சமே இல்லாம கலாய்க்கறாங்க

senthilcp

பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் குறைகள் தெரியவில்லை: எடப்பாடி - # சும்மா வெறுங்கண்ணாலயே"பாருங்க,நிறை 1ம் இல்லை

r_vichu

ஏன்பா, என்டர் பட்டனை டமார், மடார்ன்னு அடிச்சா நல்லா வேலை தெரிஞ்சவன்னு நம்பிடுவாங்களா. மெதுவா அடிங்கப்பா...

Sathik_143

பண்டிக வந்தா கடன் கொடுப்பவன தேடி போறதும் பண்டிக முடிஞ்சது கடன் கொடுத்தவன் நம்மல தேடுறதும்

வாழ்க்கை ஒரு வட்டம் தான் ...!

madurai_jinna

வீடு

காலி பண்ணும்போது மட்டும்தான்.,

மகனின் நண்பர்கள் நல்லவர்களாக தெரிகிறார்கள் பெற்றோர்களுக்கு.!

கருப்பு கருணா

“விஷத்தையும் செரித்து தேசத்திற்கு பணிபுரியும் சக்தியை அந்த சிவபெருமான் எனக்குத் தந்திருக்கிறார்”. – மோடி.

ஆலகால விஷத்தை அந்த சிவபெருமானாலேயே செரிக்க முடியாம தொண்டைக்குழிக்குள்ளேயே நின்னுக்கிட்டிருக்கு ஜி.

ameerfaj

அமைச்சர் செல்லூர் ராஜூவை ஸ்லீப்பர் செல் என்று நான் கூறவில்லை!!! #டிடிவி_தினகரன்

நியாயப்படி பார்த்தா நாசா விஞ்ஞானி'னு தானே கூப்பிட்டுருக்கனும்

imparattai

கட்சியில் ஸ்லீப்பர் செல்ஸ் இருப்பதா சொல்றீங்க,

நிர்வாகமே ஒழுங்கா நடக்காதபோதே மக்களுக்கு தெரிஞ்சுபோச்சு எல்லோருமே ஸ்லீப்பர் செல்தான்னு.!

yugarajesh

எதிர்க்கட்சிகள் கூக்குரலிட்டாலும் அதிமுக ஆட்சியைக் கலைக்க முடியாது-பழனிசாமி#அப்புறம் இதுக்கு என்ன தான் பரிகாரம் இருக்குண்ணே..?

nayagan

பொருளாதார வளர்ச்சியை ஏற்க தேசவிரோத சக்திகள் மறுப்பு -ராஜ்நாத் சிங்

சமீபகாலமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது உண்மைதான் -மோடி

samyesudoss

தேதி 9 தான் ஆகுது ரேஷன் கடையில சீனி இல்லைன்னு சொல்றான்…

டாஸ்மாக்க்கு மட்டும் சரக்கு சரியா அனுப்பிடுங்கப்பா. #வாழ்க_ஜனநாயகம்

Vinithan_Offl

அரசியலில் சேர்ந்த

இரண்டு புது வார்த்தைகள்

1.பரோல்

2.ஸ்லீப்பர் செல்

HAJAMYDEENNKS

டெய்லி தங்கம் விலை , பெட்ரோல் டீசல் விலை சொல்ற மாதிரி டெங்குவினால் இறந்தவர்கள் எண்ணிக்கையையும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க டிவி,பத்திரிக்கைகளில்

Kozhiyaar

அரசின் சாதனைகளை அமைச்சர் தொலைக்காட்சியில் விளக்கிக் கொண்டிருக்க, நறுக் கென்று ஒரு கொசு கடித்துவிட்டு போகிறது!

இதையும் சேர்த்துக்கணும் போல!

KingOfficial

வெயில் டைம் ல உங்க ஊர்ல என்ன பேமஸ்?

நுங்கு

மழை டைம் ல?

டெங்கு

கருப்பு கருணா

ஒரு நாட்டின் பிரதமரை விஷம் குடிக்கவும் தயார் என்னும் நிலைக்கு கொண்டாந்து உட்டுட்டீங்களேப்பா....

பேட் சிட்டிசன்ஸ்!

-லாக் ஆஃப்

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon