மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

வலுவான நிலையில் சர்க்கரை உற்பத்தி!

வலுவான நிலையில் சர்க்கரை உற்பத்தி!

கரும்பு உற்பத்தி வலுவாக இருப்பதால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குச் சர்க்கரை உற்பத்தி மிகச்சிறப்பாக இருக்கும் என்று தொழில் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ரிகா சுகர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநரான ஓ.பி.தானுகா கூறுகையில், “2017-18ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சர்க்கரை உற்பத்தி சுமார் 25.5 மில்லியன் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரும்பு சாகுபடி செய்யப்பட்ட நிலப்பரப்பில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 25 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டின் சர்க்கரை நுகர்வு 24 மில்லியன் டன்னாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

மழைப் பொழிவும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக நிலவிய வறட்சிக்குப் பிறகும் 2016ஆம் ஆண்டில் பொழிந்த மழையின் அளவை வைத்துப் பார்த்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குக் கரும்பு உற்பத்தி மிகச்சிறப்பாக இருக்கும். உத்தரப் பிரதேசத்தின் கரும்பு உற்பத்தி கடந்த ஆண்டை விட 19 சதவிகிதம் அதிகரித்து 10.5 மில்லியன் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016-17ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டில் இம்மாநிலங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

2016-17ஆம் ஆண்டில் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட நிலப்பரப்பு 45.64 லட்சம் ஹெக்டேராக இருந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலப்பரப்பு 49.88 லட்சம் ஹெக்டேராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon