மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

முதல்வர்- கருணாஸ் திடீர் சந்திப்பு!

முதல்வர்- கருணாஸ் திடீர் சந்திப்பு!

தமிழக திரைத்துறை அழியாமல் தடுக்க கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எம்.எல்.ஏ. கருணாஸ் சந்தித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த சசிகலாவுக்கு கடந்த 6 ஆம் தேதி நிபந்தனைகளுடன் பரோல் வழங்கப்பட்டது. சசிகலா சென்னை தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு நிபந்தனைகளுடன் வெளிவந்துள்ள சசிகலா தொடா்ந்து 3வது நாளாக இன்று தனது கணவா் நடராஜனை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார்.

சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்:

நடராஜன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை, அங்கிருந்து தங்கும் இடம் ஆகியவற்றிற்கு மட்டுமே சென்று வர சசிகலாவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பரோல் காலங்களில் அரசியல், கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கக் கூடாது.

மருத்துவமனை மற்றும் தங்குமிடத்தில் பார்வையாளர்கள் யாரையும் சந்தித்துப் பேசக் கூடாது.

இந்நிலையில், சசிகலாவின் பரோல் விதிகள் ஆச்சரியம் அளிக்கின்றன என்றும், இதில், அரசியல் சதி உள்ளது என்றும் எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் இன்று(அக்டோபர் 09) தமிழக திரைத்துறை அழியாமல் தடுக்க கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின், செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. கருணாஸ் கூறுகையில், சசிகலாவின் பரோல் விதிகள் ஆச்சரியம் அளிக்கின்றன. பரோலில் உள்ள பேரறிவாளனுக்கே அரசியல்வாதிகளை பார்க்க அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது. சசிகலா பரோலுக்காக கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில், அரசியல் சதி உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon