மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

வேகமான வளர்ச்சி வேண்டும்: ஜெட்லி!

வேகமான வளர்ச்சி வேண்டும்: ஜெட்லி!

தற்போதைய வேகத்தை விட இன்னும் வேகமாக இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டுமென்று மத்திய நிதியமைச்சரான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 9ஆம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடக்கவிருக்கும் சர்வதேச பணவியல் நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் அமெரிக்கா புறப்படுவதற்கு முன் பெர்க்லே இந்தியா மாநாட்டில் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் பேசினார். அப்போது அவர், “இந்தியப் பொருளாதாரம் இன்னும் வேகமாக வளர வேண்டுமென்பதே வெளிப்படையாக நம் முன் இருக்கும் சவாலாகும்.

சமீபத்தில் இந்தியா அடைந்த வளர்ச்சியை விட அதிக வளர்ச்சி விகிதத்தில் நகர வேண்டும். மக்களின் ஆர்வத்துக்கு ஏற்ப இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் நமது மக்கள் தொகை மட்டும் அதிகமல்ல. நமது இளைஞர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கிறது. மாற்றங்களும், சீர்திருத்தங்களும் வேகமாக ஏற்பட வேண்டும் என்று இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கின்றனர். நேரமும் நமக்கு எதிராக ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே நாம் இன்னும் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும்” என்று அவர் பேசினார்.

அரசின் திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு உள்ளது என்றும், தூய்மை இந்தியா திட்டம், ஜி.எஸ்.டி., பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஆகிய திட்டங்களால் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அருண் ஜெட்லி பேசினார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon