மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

ஜெய் அமித் ஷா விவகாரம்: தலைவர்கள் கருத்து!

ஜெய் அமித் ஷா விவகாரம்: தலைவர்கள் கருத்து!

மோடி பிரதமராகப் பதவியேற்ற பின் பாஜ தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷாவின் வருமானம் பல மடங்கு அதிகரித்துள்ளது தொடர்பாக தி வெயர் ஊடகம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் பயனடைந்த ஒரே நபரைக் கண்டுகொண்டோம். ரிசர்வ் வங்கியோ, ஏழைகளோ, விவசாயிகளோ அல்ல. ஜெய் அமித் ஷா மட்டுமே பயனடைந்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது, சி.பி.ஐ, அமலாக்கத் துறை யாரை விசாரிக்கும், விசாரிக்காது என்பது நமக்குத் தெரியும். அமித் ஷா மகன் மீது விசாரணை நடத்தப்படும் எனப் பிரதமரால் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயகத்தின் வலிமையான தூணாக ஊடகங்கள் விளங்குவதால், இது போன்ற விவகாரங்களை வெளிப்படுத்துவது அவற்றின் கடமையாகும் எனவும் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், நீதிமன்ற கவனத்தின் கீழ் உயர் மட்ட விசாரணை நட்த்த வேண்டும் என்று சிபிஐ கட்சியின் தலைவர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.

மற்ற அரசியல் கட்சிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுப்பதுபோல், சிபிஐயும் அமலாக்கத் துறையும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிடுமா என்று திருணமூல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

சிபிஎம் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரி தனது டிவிட்டர் பக்கத்தில், மோடி ஆட்சியின் கீழ் நடைபெறும் ஊழல்களில் சமீபத்தியது இது. பிரதமர் ஏன் அமைதியாக உள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon